Huawei Mate X vs Samsung Galaxy Fold : ஒரே வாரத்தில் இரண்டு மிக முக்கியமான ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் இருந்து இரண்டு பிரம்மாண்டமான மடக்கு போன்கள் வெளியாகின. சாம்சங் நிறுவனம் தங்களின் கேலக்ஸி ஃபோல்டினை சான்ஃபிரான்சிஸ்கோவில் வெளியிட, ஹூவாய் நிறுவனம் தஙக்ளின் ஸ்மார்ட்போனை மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் மாநாட்டில், ஸ்பெய்னில் அறிமுகம் செய்தனர்.
இரண்டு போன்களும் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. ஆனாலும் வெளிவந்துள்ள சிறப்பம்சங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் வெற்றி பெற்றது என்னவோ ஹூவாய் நிறுவனத்தின் மேட் எக்ஸ் தான்.
Huawei Mate X vs Samsung Galaxy Fold
உலகின் முதல் மடக்கு போனாக கருத்தப்பட்ட கேலக்ஸி ஃபோல்ட் பெற்ற லைம் லைட்டை நான்கே நாட்களில் மொத்தமாக அள்ளிச் சென்றது ஹூவாய் மேட் எக்ஸ்.
மேட் எக்ஸ், கேலக்ஸி ஃபோல்டினை விட சற்று பெரியது. ஃபினிஷிங்கும் மிக சிறப்பாக வெளி வந்துள்ளது. சாம்சங் ஃபோல்ட் ஒரு புத்தகம் போல் உள்பக்கமாக மடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட, ஒற்றை ஓ.எல்.ஈ.டி. ஃப்லெக்சிபிள் திரை வெளிப்புறமாக மடிக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
அளவு
மேட் எக்ஸ் 11 எம்.எம். திக்னெஸ் கொண்டது ஆனால் சாம்சங்கின் திக்னெஸ் 17 எம்.எம். ஆகும்.
நெட்வொர்க்
மேட் எக்ஸ் 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்குவதற்கு ஏற்றவகையில் உருவாக்கப்பட, சாம்சங் ஃபோல்ட் 4ஜி/எல்.டி.ஈ நெட்வொர்க்குகளில் தான் இயங்கும்.
பேட்டரி சேமிப்புத் திறன்
4500 mAh (55 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்) - மேட் எக்ஸ்
4,380 mAh - சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்
இரண்டு செல்போன் திரைகளையும் ஒன்றிணைக்கும் ஹிஞ்சினை தயாரிக்கவே மூன்று வருடங்கள் எங்களுக்கு தேவைப்பட்டது என்று க்ளாமெண்ட் வோங் MWC மாநாட்டில் அறிவித்திருந்தார்.
ஃபால்கான் ஹிஞ்ச் எனப்படும் இந்த உத்தியை பயன்படுத்தி கேப்-லெஸ் ஃபோல்டபிள் போன் உருவாக்கப்பட்டது மிகப் பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. மேட் எக்ஸ்சை இரண்டாக மடித்தால் இரண்டு ஸ்மார்ட்போன்கள் போல் காட்சி அளிக்கும்.
மேலும் படிக்க : சாம்சங்கைத் தொடர்ந்து ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் ஹூவாய் நிறுவனம்!
Huawei Mate X vs Samsung Galaxy Fold - சாம்சங் போனின் மைனஸ்
மேட் எக்ஸ் போனின் அறிமுக விழாவின் போதே, அதனை பயன்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்டிருந்தது இதன் ப்ளசாக அமைகிறது. ஆனால் சான்பிரான்சிஸ்கோவில் வெளியான சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் போன் அறிமுக விழாவின் போதும், கண்ணாடிகளுக்கு பின்னால் தான் சாம்சங் இருந்ததே தவிர அதனை உபயோகிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு வர இருக்கும் ஒரு போனின் அறிமுக விழா இப்படி இருப்பது என்பது அதன் விற்பனையை பெரிய அளவில் பாதிக்கும்.
முக்கிய அம்சங்கள்
இரண்டு ஸ்மார்ட்போன்களும் விற்பனையை மையமாக வைத்து உருவாக்கப்படாமல், ஆராய்ச்சி மற்றும் டெவலப்மெண்ட்டில் அடுத்தபடியை எடுத்து வைக்கவே இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஹூவாய் முழுக்க முழுக்க 5ஜி தொழில்நுட்பம் மற்றும் ஹார்ட்வேர் டிசைனில் கவனம் செலுத்த, சாம்சங் கேலக்ஸி ஃபெல்க்சிபில் ஓ.எல்.ஈ.டி திரைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
விலை
மேட் எக்ஸ் போனின் விலை 2299 யூரோ... சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் 1980 டாலர் ஆகும். இந்திய ரூபாய் மதிப்பில் இரண்டு போன்களுமே 1 லட்சம் ரூபாயை தாண்டுவதால் இவர்களின் இலக்கு வியாபார நோக்கம் இல்லை என்பது மட்டும் உறுதி.
மேலும் படிக்க : கேலக்ஸி ஃபோல்ட் : ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தில் ஒரு மைல்கல்…