/indian-express-tamil/media/media_files/2025/10/20/huawei-nova-14-2025-10-20-10-57-36.jpg)
50MP செல்ஃபி, 66W ஃபாஸ்ட் சார்ஜிங்... டெக் உலகை திரும்பிப் பார்க்க வைக்கும் ஹவாய் நோவா 14!
சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஹவாய் (Huawei), தனது புதிய நடுத்தர-தர ஸ்மார்ட்போனான நோவா 14 Vitality Edition மாடலை சீனாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி உள்ளது. நோவா 14 சீரிஸின் 4-வது மாடலாகக் களமிறங்கும் இந்த போன், சக்திவாய்ந்த கேமரா மற்றும் வேகமான சார்ஜிங் வசதியுடன் வாடிக்கையாளர்களை கவரும் அம்சங்களுடன் வந்துள்ளது. இந்த புதிய நோவா 14 வைட்டலிட்டி எடிஷன் மிகப் பெரிய சிறப்பம்சமாக அதன் கேமரா மற்றும் பேட்டரி அம்சங்கள் உள்ளன.
5,500mAh பேட்டரி மற்றும் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. 50 mp கொண்ட அதிசக்திவாய்ந்த முன்புற ஷூட்டர் செல்ஃபி கேமரா, 50 mp பின்புற கேமரா RYYB சென்சார் தலைமையிலான டூயல் கேமரா அமைப்பு (50MP பிரைமரி + 8MP அல்ட்ரா-வைட் மேக்ரோ லென்ஸ்). 6.7 இன்ச் முழு-HD+ (1,084×2,412 பிக்சல்கள்) OLED டிஸ்ப்ளே மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதம். ஐ.பி-65 தரச் சான்றிதழ் பெற்றிருப்பதால், தூசி மற்றும் நீர் எதிர்ப்புத் திறன் கொண்டது.
நோவா 14 வைட்டலிட்டி எடிஷன், ஹார்மனிஓஎஸ் 5.1 (HarmonyOS 5.1) இயங்குதளத்தில் (Dual-SIM வசதி) செயல்படுகிறது. இதன் டிஸ்ப்ளேவில் 120Hz அடாப்டிவ் புதுப்பிப்பு வீதம், 2160Hz உயர் அதிர்வெண் PWM டிம்மிங், மற்றும் 300Hz டச் சாம்ப்ளிங் வீதம் போன்ற தொழில்நுட்ப அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் அதிகபட்ச வெளிச்சம் (Brightness) 1,100 nits வரை வழங்கப்படுகிறது. பாதுகாப்பிற்காக, இந்த போன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரை கொண்டுள்ளது. இதில் வைபை, ப்ளூடூத் 5.2, NFC, ஜி.பி.எஸ்., யு.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்ற இணைப்பு வசதிகள் உள்ளன. போனின் மொத்த எடை 192 கிராம் மற்றும் அளவீடுகள் 161.73×75.48×7.18மிமீ ஆகும்.
நோவா 14 வைட்டலிட்டி எடிசனின் விலை இந்திய மதிப்பில் (தோராயமாக) 256GB சேமிப்பகம் சுமார் ரூ.27,000, 512GB சேமிப்பகம் சுமார் ரூ.30,000. இந்த ஸ்மார்ட்போன் Feather Sand Black, Frost White, Ice Blue ஆகிய 3 வண்ணங்களில் கிடைக்கிறது. இது சீனாவில் அக்.24-ம் தேதி முதல் நிறுவன விமால் ஸ்டோர் மூலம் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த மாடல் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.