32MP செல்பி கேமிரா+ 4K வீடியோ பதிவு: அல்ட்ரா ஸ்லிம் நோவா அறிமுகம்! ஃபிளிப் ஃபோன்களில் புதிய டிரெண்ட்!

நோவா ப்ளிப் எஸ் என்பது மலிவு விலையில், ஃபிளாக்ஷிப் தரமான டிஸ்பிளே மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சங்களுடன் வரும் ஒரு கவர்ச்சிகரமான ஃபோல்டபிள் ஃபோன் ஆகும். இதில் 4,400mAh பேட்டரி மற்றும் 66W ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங் வசதி உள்ளது.

நோவா ப்ளிப் எஸ் என்பது மலிவு விலையில், ஃபிளாக்ஷிப் தரமான டிஸ்பிளே மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சங்களுடன் வரும் ஒரு கவர்ச்சிகரமான ஃபோல்டபிள் ஃபோன் ஆகும். இதில் 4,400mAh பேட்டரி மற்றும் 66W ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங் வசதி உள்ளது.

author-image
Meenakshi Sundaram S
New Update
Huawei Nova Flip S

32MP செல்ஃபி கேமிரா+ 4K வீடியோ பதிவு... ஃபிளிப் ஃபோன்களில் புதிய டிரெண்ட்!

ஹுவாவே நிறுவனம் தனது புதிய கிளாம்செல் (Flip) ஃபோனான நோவா ப்ளிப் எஸ்-ஐ சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்தாண்டு வெளியான நோவா ப்ளிப் மாடலின் அத்தனை அம்சங்களையும் அப்படியே கொடுத்து, விலையை மட்டும் குறைத்து, 2 புதிய கவர்ச்சிகரமான நிறங்களுடன் இந்த 'S' சீரிஸ் வந்திருப்பது தான் ரசிகர்களுக்கு மிகப் பெரிய சர்ப்ரைஸ்.

Advertisment

புதிய நோவா ப்ளிப் எஸ், அதன் 256GB வேரியன்ட் சுமார் ரூ. 41,900 என்ற விலையிலும், 512GB வேரியன்ட் சுமார் ரூ.45,600 என்ற விலையிலும் கிடைக்கிறது. இந்த விலை, ஃபிளிப் ஃபோன் பிரிவில் மிகக் குறைவான விலைகளில் ஒன்றாகும். New Green, Zero White, Sakura Pink, Star Black, Sky Blue, மற்றும் Feather Sand Black என 6 விதமான வண்ணங்களில் இந்தப் போன் மின்னுகிறது.

மெயின் ஸ்கிரீன் உள்ளே விரிக்கும்போது, பிரம்மாண்டமான 6.94-இன்ச் Full-HD+ OLED ஃபோல்டபிள் ஸ்கிரீன் கிடைக்கிறது. இது LTPO தொழில் நுட்பத்துடன் கூடிய 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட்டைக் கொண்டிருப்பதால், ஸ்க்ரோலிங் மற்றும் வீடியோ பார்ப்பது அல்டிமேட் அனுபவமாக இருக்கும். வெளிப்புற ஸ்கிரீன் போனை மூடி வைத்திருக்கும்போது, வெளியே தெரியும் 2.14-இன்ச் OLED கவர் திரை நோட்டிஃபிகேஷன் மற்றும் செல்பி எடுப்பதற்குப் பெரிதும் உதவுகிறது.

இந்த ஃபிளிப் போன், அதன் கேமரா மற்றும் பேட்டரி திறனில் கொஞ்சமும் சளைத்தது அல்ல. பின் பகுதியில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா கொண்ட டூயல் அமைப்பு உள்ளது. இதன் மூலம் 4K தரத்தில் வீடியோ எடுக்க முடியும். செல்பிக்களுக்காக, உள்ளே 32 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. நோவா ப்ளிப் S 4,400mAh பேட்டரி உள்ளது. அதை விரைவாக சார்ஜ் செய்ய 66W ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்டாண்டர்ட் நோவா ப்ளிப்-ல் இருக்கும் அதே Kirin 8000 சிப் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. இது ஹுவாவேயின் சொந்தமான HarmonyOS 5.1 இயங்குதளத்தில் இயங்குகிறது. நேர்த்தியான வடிவமைப்பு, பேட்டரி, அதிவேக சார்ஜிங் மற்றும் சக்திவாய்ந்த கேமரா அம்சங்களுடன், பட்ஜெட் விலையில் ஃபோல்டபிள் போன் தேடுபவர்களுக்கு ஹுவாவே நோவா ப்ளிப் எஸ் சிறந்த தேர்வாக வந்துள்ளது.

Advertisment
Advertisements
Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: