Huawei Phones New Updates : மிக சமீபத்தில் லண்டனில் ஹூவாய் நிறுவனம் தன்னுடைய பிரிமியம் போன்களான மேட் 20 சீரியஸ் போன்களை வெளியிட்டது. அதில் கிரின் 980 என்ற சிப்செட் பயன்படுத்தப்பட்டது. ஆர்ட்டிஃபிசியல் இண்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவினை அதிகப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது தான் இந்த கிரின் 980 சிப்செட்.
கிரின் 980 சிப்செட் பயன்பாட்டினை மேட் 20 சீரியஸ்ஸுடன் நிறுத்த விருப்பமில்லை என மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க பிராந்தியத்தின் வாடிக்கையாளர்கள் மைய அதிகாரியாக செயல்பட்டு வரும் ஜேனே ஜியாவ் குறிப்பிட்டிருக்கிறார்.
7nm Kirin 980 Processor
இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழிற்காக அவர் அளித்த பேட்டி ஒன்றில் இந்த வருடத்தில் வெளியாக இருக்கும் ஹூவாய் போன்களில் இந்த கிரின் 980 சிப்செட பயன்படுத்தப்படும் உள்ளோம் என குறிப்பிட்டிருக்கிறார். ஹானரின் மேஜிக் 2 போனிலும் இந்த ப்ரோசசர் பயன்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க : மேட் 20 ப்ரோ போனின் சிறப்பம்சங்கள் யாவை ?
Huawei Phones New Updates : ப்ரோசசர் உலகில் தனித்து நிற்கும் ஹூவாய் நிறுவனம்
கிரின் 980யின் பயன்பாட்டினை அதிகரிப்பது என்பது நேரடியாக குவால்கோம் போன்ற ப்ரோசசர்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கும், ஆப்பிள், சாம்சங் போன்ற போன்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் சரியான போட்டியாளராக இருக்கிறது ஹானர்.
பெர்லினில் நடைபெற்ற IFA தொழில்நுட்ப வர்த்தக கண்காட்சியில் முதன்முதலாக ஹூவாய் நிறுவனம் 7nm சிப்செட்டினை அறிமுகப்படுத்த இருப்பதாக கூறியது. ஆப்பிள் நிறுவனம் அதைத் தொடர்ந்து 7nm சிப்செட்டான A12 பயோனிக் சிப்செட்டினை அறிமுகப்படுத்தியது.
சாம்சங் மற்றும் குவால்கோம் மிக விரைவில் 7nm சிப்செட்டினை அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்களின் போன்களுக்குத் தேவையான சிப்செட்டினை தானே தயாரித்துக் கொள்வதால் தான் ஆப்பிள் நிறுவனத்துடன் போட்டியிட இதனால் இயல்கிறது. ஆண்ட்ராய்ட் போன்களிலே சாம்சங் மற்றும் ஹூவாய் மட்டுமே சொந்தமாக ப்ரோசசர்களை உருவாக்குகிறது. சியோமி, ஓப்போ,விவோ, ஹெச்.எம்.டி குளோபல் போன்றவை குவால்கோம் அல்லது மீடியாடெக் சிப்செட்டுகளை அதிகம் நம்பியுள்ளது.
5ஜி தொழில் நுட்பத்தில் முனைப்புடன் செயல்படும் ஹூவாய்
குவால்கோம் மிக விரைவில் ஸ்நாப்ட்ராகன் 855 ரக சிப்செட்டுகளை வெளியிடயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஜீனேவோ முழுக்க முழுக்க ஹூவாயின் முதலீடானது சிப்செட் டிசைன்களிலும், வாடிக்கையாளர்களின் நன்மதிப்பினை பெறுவதிலும் தான் இருக்கிறது என கூறியுள்ளார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
குவால்கோம் மற்றும் ஹூவாய் நிறுவனங்கள் 5ஜி டெக்னாலஜியில் இயங்கும் சிப்செட்டுகளை உருவாக்குவதில் அதிக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. ஒன்ப்ளஸ் அடுத்த வருடம் வெளியிட இருக்கும் செல்போனில் குவால்கோமின் 5ஜி சப்போர்ட் செய்யும் சிப்செட் இருக்கும் என அறிவித்திருக்கிறது குவால்கோம்.
ஹூவாய் நிறுவனம் அடுத்த வருடம் ஃபோல்டபல் போன்களை வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது ஹூவாய். அதே போல் சீனாவிலும் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது ஹூவாயின் போன்கள். இந்தியாவில் இன்னும் பெரும்வாரியான மக்களிடம் இந்த போன்கள் சென்று சேரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.