ஹூவாய்-ன் சமீபத்திய ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் - Pura 70 Ultra, Kirin 9010 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது, இது Changlian ஆப் மூலம் செயற்கைக் கோள் தகவல்தொடர்புகளைப் பயன்படுத்தி மற்றவர்களுக்கு படங்களை அனுப்ப முடியும். இது consumer-centric ஸ்மார்ட் போனாக உள்ளது. Huawei சமீபத்தில் சீன சந்தைக்காக Pura 70 Ultra, அறிமுகம் செய்தது.
சீனாவில் ஃபேப் செய்யப்பட்ட in-house processor மூலம் இயக்கப்படும் நிறுவனத்தின் இரண்டாவது ஃப்ளாக்ஷி ஸ்மார்ட் போன் இதுவாகும். செயற்கைக் கோள் தொடர்புகளைப் பயன்படுத்தி படங்களைப் பெற, அனுப்ப மற்ற நபர்களும் இந்த Changlian செயலி பயன்படுத்த வேண்டும். கிட்டதட்ட இது WeChat போல செயல்படுகிறது. இந்த ஆப் தற்போது Huawei App Market மூலம் குறிப்பிட்ட Huawei ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கிறது.
Huawei Pura 70 Ultra செயற்கைக் கோள் இணைப்புடன் கூடிய முதல் ஸ்மார்ட்போன் அல்ல என்றாலும், செயற்கைக் கோள் நெட்வொர்க்கைப் பயன்படுத்தி படங்களை அனுப்பும் திறன் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த அம்சம் அவசரகால பயன்பாட்டிற்காக மட்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறியது.
ஆப்பிள் நிறுவனமும் தங்கள் போனில் இதுபோன்ற வசதிகளை வழங்கி வருகிறது. iPhone 14 சீரிஸில் செயற்கைக்கோள் இணைப்பு வசதியை வழங்கி வருகிறது. இதன் மூலம் ஆப்பிள் பயனர்கள் அவசரகாலத்தில் மெசேஜ் மற்றும் லைவ் லொக்கேஷனை பகிர முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“