இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்.யூ.வி கார் ஹூண்டாய் கோனா ஒரு பார்வை...

Hyundai KONA electric SUV : ஃபேண்டம் ப்ளாக், போலார் ஒயிட், மரினா ப்ளூ, டைப்ஃபூன் சில்வர் போன்ற நிறங்களில் இது வெளியாகிறது.

Hyundai KONA Electric India’s first fully electric SUV launched today : இந்தியாவில் இன்று வெளியானது ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா எலெக்ட்ரிக் கார் (Electric SUV Car) . அதி நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டிருக்கும் இந்த காரினை ஒரு முறை சார்ஜ் செய்தால் 452 கி.மீ தூரத்தை கடக்கும். த்ரில் ட்ராவலர்களின் கனவாக விளங்கும் ஹவாய் தீவுகளில் இருக்கும் கோனா பகுதியை போற்றும் விதமாக  இந்த காருக்கு பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

நகர்புற பகுதிகளில் அதிரடி கிளப்பும் வகையில் அசத்தலான வடிவமைப்பு, சிறப்பான வெளிப்புறத்தோற்றம் என்று நம்மை இதன் அழகில் மயங்கவைக்கிறது என்று சொன்னாலும் மிகையாகாது. உலக அரங்கில் கோனா எலெக்ட்ரிக்கிற்கு நன்மதிப்பு இருப்பதால், இந்தியாவிலும் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று இந்த நிறுவனத்தின் எம்.டி. மற்றும் தலைமை இயக்குநர் எஸ்.எஸ். கிம். குறிப்பிட்டுள்ளார். இந்த வாகனத்தின் வருகையானது, இந்தியாவின் எலெக்ட்ரிக் கார்கள் துறையில் ஒரு மைல் கல்லாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க : ரெவால்ட் ஆர்.வி. 400 : ஆன் – போர்ட் சார்ஜருடன் அறிமுகமாகும் எலெக்ட்ரிக் பைக்… நடுவழியில் பேட்டரி தீர்ந்தாலும் இனி கவலை இல்லை

சிறப்பம்சங்கள்

சூப்பர் வேகத்திறன் கொண்ட சார்ஜிங் முறையில் கோனா எஸ்யூவி-க்கு 57 நிமிடங்களில் 80% வரையில் சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதன் ஆன் – போர்ட் சார்ஜரின் செயல்திறன் 7.2 kW ஆகும்.

CCS Type II சார்ஜரில் சார்ஜ் செய்தால் முழு பேட்டரியையும் சார்ஜ் செய்ய 6 மணி நேரம் 10 நிமிடங்கள் ஆகும்.

எக்கோ +, எக்கோ, கம்ஃபோர்ட், மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகிய நான்கு மோட்களில் இந்த வண்டியை இயக்க இயலும்.

64 kWh லித்தியன் ஐயான் பேட்டரி கொண்ட கோனா எலெக்ட்ரிக் காரின் பீக் திறன் 201.2 bhp ஆகவும் 395Nm ஆகவும் உள்ளது.

இதன் அக்சலரேசன் 0-100 கி.மீ. என்ற வேகத்திற்கு செல்ல வெறும் 9.7 நொடிகளே தேவைப்படுகிறது.

நிறங்கள்

நவீன தொழில்நுட்பம் ஆனால் சுற்றுப்புற சூழலுக்கு எந்த விதமான ஆபத்தும் தராத காராக இது உருவாக்கப்பட்டது. ஃபேண்டம் ப்ளாக், போலார் ஒயிட், மரினா ப்ளூ, டைப்ஃபூன் சில்வர், போலார் ஒயிட்டுடன் கூடிய ஃபேண்டம் ப்ளாக் ரூஃப் ஆகிய கலர் வேரியண்டுகளில் இந்த கார்கள் விற்பனைக்கு வருகிறது.

மேலும் படிக்க : எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பட்ஜெட் 2019

வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் எலெக்ட்ரிக் கார்கள் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்பு சலுகைகளை வெளியிட்டார் நிதி  அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close