scorecardresearch

ஐ.டி-யில் தொடரும் பணி நீக்கம்.. 3,900 ஊழியர்களை நீக்க ஐ.பி.எம் முடிவு.. காரணம் என்ன?

IBM cuts 3900 jobs: முன்னணி ஐ.டி நிறுவனமான ஐ.பி.எம் 3,900 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது.

ஐ.டி-யில் தொடரும் பணி நீக்கம்.. 3,900 ஊழியர்களை நீக்க ஐ.பி.எம் முடிவு.. காரணம் என்ன?

கூகுள், மைக்ரோசாப்ட், ட்விட்டர், அமேசான் உள்பட பல முன்னணி ஐ.டி நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் தற்போது அந்த வரிசையில் ஐ.பி.எம் நிறுவனம் இணைந்துள்ளது. 3,900 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக நேற்று (புதன்கிழமை) நிறுவனம் அறிவித்தது. சொத்து விலக்கல்களின் ஒரு பகுதியாக நிறுவனம் அதன் ஆண்டு வருவாய்யை ஈட்ட தவறிவிட்டதாக கூறியுள்ளது.

Kyndryl வணிகம், AI யூனிட் Watson Health ஆகிய பிரிவுகளில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவுகளில் ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் 300 மில்லியன் டாலர் கட்டணம் செலவாகும் என ஐபிஎம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் பங்குகள் 2% சரிந்தன, இது முந்தைய லாபங்களில் பாதிப்பை ஏற்படுத்தியது. பணப்புழக்கம் குறைவு, பொருளாதார சரிவு, ஆகியவை இதன் பின்னணியில் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

ஐ.பி.எம்-இன் 2022 பணப்புழக்கம் 9.3 பில்லியன் டாலராக இருந்தது. அதன் இலக்கான 10 பில்லியன் டாலருக்கு கீழ் சென்று எதிர்பார்த்ததை விட அதிகமான பணி மூலதனத் தேவைகள் காரணமாக இருந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Ibm cuts 3900 jobs misses annual cash target

Best of Express