உலககோப்பை கிரிக்கெட் : வாடிக்கையாளர்களுக்காக சலுகைகளை அள்ளி வீசும் ஜியோ

ஜியோ டிவி மூலமாக மேட்ச்களை பார்க்க விரும்பினால் அந்த இணைப்பும் நேரடியாக ஹாட் ஸ்டாருக்கு ரீ டிரைக்ட் செய்யப்படுகிறது.

ICC World Cup 2019 Reliance Jio offers :  உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் இந்த வேலையில் தன்னுடைய 300 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கும் ஒரு நல்ல செய்தியை கூறியிருக்கிறது ரிலையன்ஸ் நிறுவனம்.

ICC World Cup 2019 Reliance Jio offers

தற்போது ஜியோ சேவையை பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களும் எந்த விதமான தடையுமின்றி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை லைவாக மேலும் இலவசமாக பார்க்கலாம்.  இதற்கு முன்பு ஐபிஎல் போட்டிகளை இவ்வாறு இலவசமாக ஒளிபரப்பியது ஜியோ என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாட்ஸ்டார் பயன்படுத்தும் அத்தனை ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் இந்த சலுகை அளிக்கப்படுவதால் ஹாட்ஸ்டாருக்காக இனி நீங்கள் ரூ.365 கட்டத் தேவையில்லை.

ஜியோ வாடிக்கையாளர்கள் கட்டணம் ஏதுமின்றி ஹாட்ஸ்டாரில் கிரிக்கெட்டினை லைவாக பார்த்துக் கொள்ளலாம். ஆட்டோமேட்டிக் அக்செஸ் வழங்கப்பட்டுள்ளது. ஜியோ டிவி மூலமாக மேட்ச்களை பார்க்க விரும்பினால் அந்த இணைப்பும் நேரடியாக ஹாட் ஸ்டாருக்கு ரீ டிரைக்ட் செய்யப்படுகிறது.

Jio Unlimited Cricket Season Data Pack

ஜியோ நிறுவனம் ஏற்கனவே 51 நாட்கள் வேலிடிட்டி கொண்ட அன்லிமிட்டட் கிரிக்கெட் சீசன் டேட்டா பேக்கை வாடிக்கையாளர்களுக்கு ரூ. 251க்கு வழங்கியுள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் 102 ஜிபி டேட்டாவை பெற்றுக் கொள்ள இயலும். இந்த டேட்டாவை நீங்கள் ப்ரௌசிங்கிறாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Jio Cricket Play Along

ஜியோ தற்போது கிரிக்கெட் ப்ளே அலாங் என்ற புதிய கேம் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. ஜியோ மற்றும் நான் ஜியோ வாடிக்கையாளர்கள் என இரு தரப்பினரும் அதனை விளையாடலாம்.

மைஜியோ ஆப் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோரிலும் இந்த கேமை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

மேலும் படிக்க : Apple WWDC 2019 நிகழ்வில் வெளியிடப்பட்ட ஓ.எஸ்.களின் முக்கியமான அப்டேட்கள் என்னென்ன ?

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close