ஐடியா 149 ரீசார்ஜ் : ஜியோ, ஏர்டெல் வரிசையில் புதிய ப்ரிபெய்ட் சேவை அறிமுகம் - Idea Launches Rs. 149 Recharge plan with 33 GB Internet and unlimited calls to take on Jio, Airtel | Indian Express Tamil

ஐடியாவின் புதிய ப்ரிபெய்ட் சேவை – 149 ரூபாய்க்கு அதிக சலுகைகள் அறிமுகம்

Idea Rs 149 Prepaid Recharge Plan: 33 ஜிபி டேட்டா, அன்லிமிட்டட் போன் கால்கள், நாளொன்றிற்கு 100 குறுஞ்செய்திகள் வழங்குகிறது

ஐடியாவின் புதிய ப்ரிபெய்ட் சேவை – 149 ரூபாய்க்கு அதிக சலுகைகள் அறிமுகம்
Idea Rs 149 Recharge Plan

ஐடியா 149 ரீசார்ஜ் : ஜியோ, ஏர்டெல், வரிசையில் தற்போது ஐடியா செல்லுலார் தன்னுடைய புதிய ப்ரீபெய்ட் சேவையை வழங்கியிருக்கிறது. 149 ரூபாய்க்கு வழங்கப்படும் அந்த சேவையின் மூலமாக டேட்டா, வாய்ஸ் கால், மற்றும் குறுஞ்செய்தி சேவைகளை 28 நாட்களுக்குப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த ப்ரீபெய்ட் சேவை மூலமாக 33ஜிபி டேட்டாவினையும் அன்லிமிட்டட் வாய்ஸ் கால்களையும் ஒரு நாளைக்கு 100 குறுஞ்செய்திகளையும் 28 நாட்களுக்கு அனுப்பிக் கொள்ளலாம்.

இந்த 28 நாட்களில் குறிப்பிட்ட 100 எண்களுடன் மட்டுமே பேச இயலும். நாளொன்றிற்கு 250 நிமிடங்களுக்கும் வாரம் ஒன்றிற்கு 1000 நிமிடங்களுக்கும் அன்லிமிட்டட் சேவையினை உறுதி செய்கிறது இந்த ப்ரீபெய்ட் சேவை.

இதே 149 ரூபாய் ஆஃபரில் ஜியோ நாளொன்றிற்கு 1.5ஜிபி 4ஜி சேவையில் டேட்டாவை வழங்குகிறது. 28 நாட்கள் என்ற வேலிட்டியில் பார்க்கும் போது 42ஜிபி டேட்டாவை தருகிறது. ஆனால் ஏர்டெல் நிறுவனம் 28ஜிபி டேட்டாவை மட்டுமே தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஐடியா ப்ரீபெய்ட் சேவை தெலுங்கானா, ஆந்திரா, மற்றும் கர்நாடகா என சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே அறிமுகமாகியிருக்கிறது.

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Idea launches rs 149 recharge plan with 33 gb internet and unlimited calls to take on jio airtel