கிராமப்புற ஆரோக்கியத்தை மேம்படுத்த கருவி: சென்னை ஐ.ஐ.டி புது முயற்சி | Indian Express Tamil

கிராமப்புற ஆரோக்கியத்தை மேம்படுத்த கருவி: சென்னை ஐ.ஐ.டி புது முயற்சி

ஒவ்வொரு மாதமும் இணைய அடிப்படையிலான நேரடி தொடர்புகள் ஒழுங்கமைக்கப்பட்டன, அங்கு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான சிறப்பு விரிவுரைகள் நடைபெற்றன.

கிராமப்புற ஆரோக்கியத்தை மேம்படுத்த கருவி: சென்னை ஐ.ஐ.டி புது முயற்சி

ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில், கிராமப்புற பட்டியல் சாதி சமூகங்களின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கவும் மேம்படுத்தவும் தகவல் தொழில்நுட்ப கருவியை இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் உருவாக்கியுள்ளது.

ஓப்பன் சோர்ஸ் மூலம் கிடைத்தவற்றை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்தக் கருவி, குடும்பங்களின் சுகாதாரம் தொடர்பான தகவல்களை விரிவாக சேகரித்து, அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் உணவு உட்கொள்ளும் ஆலோசனை முதலியவற்றை தெரிவிக்கும் என்று கூறப்படுகிறது.

கடந்த காலத்தில், அவர்களின் உணவில் முக்கியமாக ராகி மற்றும் பிற தினைகள், ஏராளமான பால் பொருட்கள், மீன் மற்றும் பிற நீர்வாழ் இறைச்சிகள் இருந்தன. ஆயுர்வேதக் கல்லூரியின் மருத்துவர் குழு – ஹர்நாத் சாரி மற்றும் ஞான பிரசூனாம்பா ஆகியோர் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கிராமங்களுக்குச் சென்று இந்தத் திட்டத்தை திறம்பட செயல்படுத்த உதவினார்கள்.

வறுமையின் காரணமாக, அவர்களின் தற்போதைய உணவு பற்றாக்குறையுடன் உள்ளது. பருப்புகள், பால் பொருட்கள் அல்லது இறைச்சி இல்லாமல் இருக்கிறது. இதனால், பெண்கள், குழந்தைகள் ரத்த சோகையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிபுணத்துவம் வாய்ந்த சுகாதாரப் பயிற்சியாளர்களின் சரியான உணவு ஆலோசனைகள் மூலம் இந்த அறிகுறிகளைத் தணிக்க முடிந்தது. மேலும் ஐஐடி மெட்ராஸ் முயற்சிகள் அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் அமைந்தன.

ஒவ்வொரு மாதமும் இணைய அடிப்படையிலான நேரடி தொடர்புகள் ஒழுங்கமைக்கப்பட்டன, அங்கு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான சிறப்பு விரிவுரைகள் நடைபெற்றன.

சித்தூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம், சுமார் 100 பட்டியல் சாதி (SC) குடும்பங்களை கண்காணிக்கிறது, ஒவ்வொரு குடும்பமும் 5-6 உறுப்பினர்களைக் கொண்டவை என்று ஐஐடி-எம் தகவல் தெரிவித்துள்ளது.

திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து, ஐஐடி மெக்கானிக்ஸ் துறை பேராசிரியர் சி லட்சுமண ராவ் கூறுகையில், “கிராமங்களில் விரிவான அடிப்படை கணக்கெடுப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்தி சுகாதார நிலை மற்றும் செலவுகள் பற்றிய மேப்பிங் மேற்கொள்ளப்பட்டது.

இந்த மருத்துவ சிகிச்சை மற்றும் உணவு ஆலோசனைகள், IT கருவிகளின் கண்காணிப்பு மூலம் முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஐஐடி-எம் குழு ஒரு புதுமையான ‘கிராமீன் ஆயுர்வேத மொபைல் அப்ளிகேஷனை’ உருவாக்கியது”.

ஆன்ட்ராய்டு அடிப்படையிலான ஸ்மார்ட் மேனேஜர், ஒரு நபரின் மொத்த சுகாதாரத் திட்டத்தை டிஜிட்டல் முறையில் பராமரிக்கும். மேலும் நோயாளிகளின் உடல்நிலை மற்றும் சிகிச்சை பற்றின பதிவுகளைக் கண்காணிக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Iit madras initiated a new digital app for enhancing rural communities health in chittoor district