அமெரிக்காவின் ஹூஸ்டனை தளமாக கொண்ட இன்ட்யூட்டிவ் மெஷின் (Intuitive Machines) என்ற தனியார் நிறுவனம் ஒடிஸியஸ் மூன் லேண்டரை கடந்த 15-ம் தேதி ஸ்பேஸ் எக்ஸின் பால்கன் 9 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக ஏவியது. இந்நிலையில், விண்கலம் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாகவும், நாளை (பிப்.22) தரையிறக்குவதற்கான பாதையில் சரியாக பயணித்துவருவதாகவும் நிறுவனம் கூறியது.
பிப்ரவரி 16 மற்றும் பிப்ரவரி 18 ஆகிய தேதிகளில் என்ஜின் இக்னீசன் செய்யப்பட்டது என்றும் கூறியது. விண்கலம் நிலவை நோக்கி நெருங்கி சென்றுள்ளது. இன்று (பிப்.21) திட்டத்தின் மிக முக்கிய செயல்பாடான விண்கலத்தை நிலவு சுற்றுப் பாதையில் செலுத்தும் பணி நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து நாளை (பிப்.22) நிலவின் மேற்பரப்பில் தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஒடிஸியஸ் பூமியின் அடுத்த வான அண்டை மூலம் நேரடி பாதையில் சென்று நிலவில் தரையிறக்க உள்ளது.
பூமியில் இருந்து 3,84,400 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 8 நாட்களில் கடந்த செல்கிறது. சந்திரனை நெருங்கும் போது அப்பல்லோ பயணங்கள் எடுத்த அதே பாதையில் விண்கலம் செல்கிறது.
இந்த விண்கலம் வியாழக்கிழமை அதிகாலை 4:19 மணிக்கு நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எங்கு தரையிறக்கம்?
விண்கலம் நிலவின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த பகுதி வானியலாளர்களுக்கு ஒரு புதிராகவே உள்ளது. இந்தியா சந்திரயான்-3-ஐ தரையிறக்கிய தென் துருவப் பகுதிக்கு அருகில் இந்த விண்கலம் தரையிறக்கப்படுகிறது.
மலாபெர்ட் A பள்ளத்திற்கு மேலே விண்கலம் தரையிறங்கத் தொடங்கும், இது 69 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெரிய மலாபெர்ட் பள்ளத்திற்கு அருகில் உள்ள செயற்கைக்கோள் பள்ளம் ஆகும். ஒடிஸியஸ் திட்டம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கினால் நிலவில் கால்பதித்த முதல் தனியார் லேண்டர் என்ற சாதனையைப் பெறும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“