/indian-express-tamil/media/media_files/SWQU1oa0MkjlUBsCPc6c.jpg)
அமெரிக்காவை தளமாகக் கொண்ட தனியார் நிறுவனம் சமீபத்தில் மூன் லேண்டரை விண்ணில் ஏவியது. லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கினால் நிலவில் தரையிறக்கும் முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை Intuitive Machines பெறும்.
Intuitive Machines தனது பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஃபால்கன் 9 ராக்கெட்டில் இருந்து பிரிந்த லேண்டர் முதல் புகைப்பபடத்தை எடுத்து அனுப்பியது. இந்த புகைப் படங்களில், நோவா-சி எனப்படும் விண்கலமும் பின்னணியில் பூமியுடன் தெரியும்.
Intuitive Machines successfully transmitted its first IM-1 mission images to Earth on February 16, 2024. The images were captured shortly after separation from @SpaceX's second stage on Intuitive Machines’ first journey to the Moon under @NASA's CLPS initiative. pic.twitter.com/9LccL6q5tF
— Intuitive Machines (@Int_Machines) February 17, 2024
வியாழன் காலை நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து Intuitive Machines ஒடிசியஸ் பணியை ஏவியது குறிப்பிடத்தக்கது. "Intuitive Machines அதன் முதல் IM-1 பணிப் படங்களை பிப்ரவரி 16, 2024 அன்று பூமிக்கு வெற்றிகரமாக அனுப்பியது. நாசாவின் உதவியின் கீழ் சந்திரப் பயணத்தில் ராக்கெட் இரண்டாவது கட்டத்தில் இருந்து பிரிந்த சிறிது நேரத்திலேயே படங்கள் எடுக்கப்பட்டன" என நிறுவனம் கூறியது. இந்த மூன் லேண்டர் பூமியை துல்லியமாகவும், தெளிவாகவும் படம் எடுத்து அனுப்பியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.