இந்தியாவில் களமிறங்கும் ஆப்பிள் 'ஐ-மேக் ப்ரோ'

, இதுவரை வெளிவந்த மேக்கை மறக்க செய்யும் வகையில், இதன் டிஸ்ப்ளே மற்றும் தொடுதிரை சிறந்த வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பலரின் கவனத்தையும் பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-மேக் ப்ரோ இந்திய சந்தையில் களமிறங்குகிறது.

அதி நவீன தொழில்நுட்பத்தில் அனைத்து அம்சங்களைக் கொண்ட ஐ-மேக் ப்ரோ கணினி, சமீபத்தில் அமெரிக்காவில் அறிமுகமாகியது. அதனைத் தொடர்ந்து தற்போது இந்திய சந்தையில் 4,15,000 ரூபாய்க்கு விலைக்கு வருகிறது. நவீன டிஸ்ப்ளே, அதிவேக பிராசஸர் மற்றும் கிராஃபிக்ஸ் திறன் கொண்ட பிராசஸர், விர்ச்சுவல் ரியாலிட்டி தரவுகளை உருவாக்கும் வசதி, புதிய போர்ட்கள் என அனைத்து வகையான சிறப்பம்சங்களும் ஐ-மேக் ப்ரோவில் அதிக கவனத்துடன் செயல்படுத்தப்பட்டுள்ளன.

வீடியோ எடிட்டிங், ஆடியோ பதிவுகள், ஹெச்டி ஃபோட்டோஸ், என மேக் பிரியர்களுக்கு எப்போதுமே அவர்களின் கணினி குறித்த எதிர்ப்பார்புகள் அதிகளவில் இருக்கும். இந்த எதிர்ப்பார்புகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் விதமாக ஐ-மேக் ப்ரோ வடிவமைக்கப்பட்டுள்ளதாக, ஆப்பிள் நிறுவனத்தின் உதவித்தலைவர் ஜோன் தெரிவித்துள்ளார்.

இந்த ஐ-மேக் ப்ரோவில் பொருத்தப்பட்டுள்ள ‘சிப்செட்’ மற்றும் டிரைவ்கள் அதிவேகத்துடன் செயல்படுகிறது. ஐ.பி.எஸ் டெக்னாலஜியில் உருவாக்கப்பட்ட இதன் வடிவம் பார்ப்பவரை கவர்ந்து இழுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஐ-மேக் ப்ரோவின் எடை, இதுவரை வெளிவந்த அனைத்து மேக்களை விட குறைந்த எடைக் கொண்டுள்ளது கூடுதல் சிறப்பு.

ஆப்பிள் ‘ஐ-மேக் ப்ரோ’ சிறப்பம்சங்கள்:

*27-இன்ச் 5கே டிஸ்ப்ளே

*5120X2880 பிக்செல்

*1 பில்லியன் கலர் சப்போர்ட்

*கேம்பட் 3.2 ஜிஎட்ச்

*டர்போ பூச்ட் 4.2 ஜிஎட்ச்

*ஸ்ட்ரோரெஜ் 32ஜிபி 2666 எம்ஜிஎட்ச்

இந்த ஐ-மேக் ப்ரோவை கையில் தொடும் போதும் ஏற்படும் உணர்வு, இதுவரை வெளிவந்த மேக்கை மறக்க செய்யும் வகையில், இதன் டிஸ்ப்ளே மற்றும் தொடுதிரை சிறந்த வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

×Close
×Close