Advertisment

ITR 2020 filing: சிம்பிளா இதைப் பண்ணுங்க... கைகொடுக்கும் சூப்பரான 4 ‘ஆப்’கள்!

Income tax efiling apps: தேவையான அனைத்து விவரங்களையும் படித்த பிறகு, இந்த ஆப் ஐடிஆர் பூர்த்தி செய்வதற்கான செயல்முறையைத் தொடங்குகிறது

author-image
WebDesk
New Update
Income Tax Return Filing

Income tax tamil news, ITR 2020 filing: 2019-20 நிதியாண்டிற்கான வருமான வரி (ஐடிஆர்) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31-லிருந்து நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2018-19 நிதியாண்டிற்கான வருமான வரியை தாக்கல் செய்யாதவர்கள், செப்டம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம். Android மற்றும் iOS-ல் ஆன்லைனில் மூலமாக ஐடிஆர் தாக்கல் செய்ய உதவும் ஆப்-ஸ் பட்டியல் இங்கே.

Advertisment

கிளியர்டாக்ஸ் (ClearTax)

இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் வரி apps-களில் கிளியர்டாக்ஸ் ஒன்றாகும். ஐடிஆர் செயல்முறையை இது மிகவும் எளிதாக்குகிறது, ஏனெனில் பயனர்கள் அனைத்து விவரங்களையும் separate dialogue boxes-களில் பதிவிடவும், ஐடிஆர் தாக்கல் செயல்முறைக்கு வசதியாக படிவம் 26 ஏஎஸ் மற்றும் படிவம் 16 ஐ பதிவேற்றவும் அனுமதிக்கிறது. உங்கள் எல்லா விவரங்களும் ClearTax நெட்வொர்க்குடன் இணைக்கப்படும். மேலும் மீதமுள்ள செயல்முறையையும் கவனிக்கும். அதன் பிறகு, பயனர் தளத்திற்குச் சென்று அவர்களின் Income Tax Refund Status நிலையைச் சரிபார்த்து, நடப்பு மற்றும் அடுத்த நிதியாண்டிற்கான வருமான வரியைக் கணக்கிட வேண்டும், மேலும் HRA சலுகைகளை கோர வாடகை ரசீதுகளையும் கொண்டிருக்க வேண்டும்.

எவ்வளவு சீக்கிரம் தொடங்குகிறோமோ, அவ்வளவு லாபம்…மியூச்சுவல் ஃபண்ட்!

All India ITR

இது ClearTax ஐ விட மிகவும் எளிதான apps ஆகும். பயனர் தங்கள் செர்வரில் பதிவேற்றும் படிவம் 16 மற்றும் பிற ஆவணங்களிலிருந்து தேவையான அனைத்து விவரங்களையும் இது ஆராய்கிறது. தேவையான அனைத்து விவரங்களையும் படித்த பிறகு, இந்த ஆப் ஐடிஆர் பூர்த்தி செய்வதற்கான செயல்முறையைத் தொடங்குகிறது. ஆவணங்களிலிருந்து தேவையான தரவை சேகரிக்க முடியாவிட்டால், ஒரு வரி நிபுணர், பயனருடன் சேர்ந்து விவரங்களைக் கேட்க முடியும். இந்த ஆப், பயனர்களை வருமான வரி / எச்ஆர்ஏ கணக்கிட அனுமதிக்கிறது, மேலும் வாடகை ரசீதுகளையும் அனுமதிக்கிறது.

H&R Block

இந்த பட்டியலில் உள்ள பிற ஆப்-களைப் போலவே, H&R Block-ன் MyBlock ஆப் பயனர்களை வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய அனுமதிக்கிறது. All India ஐ.டி.ஆரைப் போலவே, பயனரின் ஐ.டி.ஆர் மிகவும் சிக்கலானதாக இருந்தால், பயனருக்கு இந்த செயல்முறையின் மூலம் உதவ ஒரு வரி நிபுணரை நியமிக்கிறது. அதன் பயனர்கள் தங்கள் வரி ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றவும், வரிவிதிப்பை அவர்கள் தாக்கல் செய்யும் நிலையை சரிபார்க்கவும் இது உதவுகிறது.

ஸ்டேட் பேங்கில் எல்லாமே ஈஸி…தெரிந்துக் கொள்ளுங்கள்!

Tax Smile

பிற apps-களைப் போலன்றி, Tax Smile பயனர்களுக்கு intuitive கேள்விகளை வழங்குகிறது, அவை ஆழமான வரிச் சட்ட விவரங்களை அடிப்படையாகக் கொண்டவை. இந்த ஆப் சரியான தேதி மற்றும் தொகை போன்ற வரி விவரங்களை கணக்கிடுகிறது மற்றும் பயனர்களுக்கு post-filing ஆதரவை வழங்குகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Income Tax Returns
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment