scorecardresearch

வாட்ஸ் அப்பில் Independence Day ஸ்டிக்கர்ஸ்: டவுன்லோட் செய்வது எப்படி?

வாட்ஸ் அப்பில் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு Independence Day ஸ்டிக்கர் அனுப்பி மகிழுங்கள். ஸ்டிக்கர் டவுன்லோட் செய்வது எப்படி என்பதை இங்கு பார்க்கலாம்.

வாட்ஸ் அப்பில் Independence Day ஸ்டிக்கர்ஸ்: டவுன்லோட் செய்வது எப்படி?

நாட்டில் 76ஆவது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. மக்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு சமூகவலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்து மகிழ்கின்றனர். அந்த வகையில் வாட்ஸ் அப்பில் ஸ்டிக்கர் அனுப்பி வாழ்த்து தெரிவிப்பது இப்போதைய ட்ரெண்ட் ஆக உள்ளது.

பிறந்த நாள் வாழ்த்து, ஆயுத பூஜை வாழ்த்து, காமெடி ஸ்டிக்கரஸ் எனப் பல உள்ளன. இந்த வரிசையில் சுதந்திர தின விழா தொடர்பான ஸ்டிக்கர்களை டவுன்லோட் செய்து அனுப்புவது குறித்து இங்கு பார்க்கலாம்.

Step 1: ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் தங்கள் கூகுள் பே ஸ்டோர் சென்று, ‘WhatsApp Independence Day stickers’ (சுதந்திர தின விழா ஸ்டிக்கர்ஸ்) எனக் குறிப்பிட்டு தேடவும். பின் அதில் வரும் ஆப்களில் உங்களுக்கு பிடித்தமான ஒன்றை டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம். (எ.கா) Sticker.ly என்ற ஆப் கூகுள் பே ஸ்டோரில் இருக்கும். இதில் நிறைய வகையான ஸ்டிக்கர்கள் இருப்பதால் இது பரிந்துக்கப்படுகிறது. ஐபோன் பயனர்களுக்கும் இந்த ஆப் உள்ளது.

Step 2: Sticker.ly ஆப் டவுன்லோட் செய்த பின், அதில், ‘For You’ பகுதிக்கு செல்ல வேண்டும். அங்கு Independence Day ஸ்டிக்கர் பேக் வரவில்லை என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சர்ச் ஐகான் (search icon) பயன்படுத்தி, Independence Day stickers எனக் குறிப்பிட்டு தேடவும்.

Step 3: அதில் நிறைய ஸ்டிக்கர் பேக் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் ஏதோ ஒன்றை செலக்ட் செய்யவும். பின், அதன் கீழே ‘Add to WhatsApp’ ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். அதைக் கொடுத்து டவுன்லோட் செய்யுங்கள்.

Step 4: டவுன்லோட் கொடுக்கப்பட்ட பின் மீண்டும் Add to WhatsApp எனக் கேட்கும். அதையும் கொடுத்தால் ஸ்டிக்கர் பேக் வாட்ஸ் அப்பில் வந்துவிடும்.

Step 5: இப்போது வாட்ஸ் அப் சென்று, சாட் பகுதிக்கு செல்லுங்கள். அதில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இமோஜி பட்டனுக்கு சென்றால் ஸ்டிக்கர் செக்ஷன் இருக்கும். அதில் நீங்கள் டவுன்லோடு செய்த ஸ்டிக்கர்ஸ் இருக்கும். இப்போது அதை உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி மகிழலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Independence day 2022 how to add send stickers on whatsapp