New Update
00:00
/ 00:00
ரம்மி சர்க்கிள் மற்றும் ட்ரீம் 11 போன்ற உண்மையான பணம் வைத்து விளையாடும் சூதாட்ட செயலிகளுக்கு கூகுள் ப்ளே ஸ்டோர் அனுமதி வழங்க தயாராகி வருவதாக தெரிகிறது. நிறுவனத்தின் சமீபத்திய தகவல்படி, அதிகாரப்பூர்வ ஆண்ட்ராய்டு ஆப் ஸ்டோரில் (கூகுள் ப்ளே ஸ்டோர்) ரம்மி சர்க்கிள் மற்றும் ட்ரீம் 11 போன்ற உண்மையான பணம் வைத்து விளையாடும் சூதாட்ட செயலிகள் உள்ளடக்கம் செய்யப்பட உள்ளது என்ற அறிவித்தது. இந்த ஆண்டு (2024) ஜூன் முதல் சேர்க்கப்பட உள்ளது எனக் கூறியுள்ளது.
தற்போதுள்ள பாதுகாப்புக் கொள்கைகள் பயனுள்ளதாக இருந்தாலும், இந்தியா மற்றும் மெக்சிகோவில் நடத்தப்பட்ட ஆரம்ப சோதனைகளின் போது, பிரபலமான ரம்மி மற்றும் டெய்லி பேண்டஸி ஸ்போர்ட்ஸ் ஆப்ஸ்களுக்கு பாசிட்டிவ் கருத்துகள் வந்தன என நிறுவனம் கூறியது. இதன் அடிப்படையில் கூகுள் இந்த முடிவை எடுத்தது போல் தெரிகிறது.
தொழில்நுட்ப நிறுவனமான பைலட் பயன்பாடுகளுக்கான சலுகைக் காலத்தை ஜூன் 30 வரை ப்ளே ஸ்டோரில் நீட்டித்துள்ளது, அப்போதுதான் புதிய கொள்கை நடைமுறைக்கு வரும்.
மேலும், அந்தந்த நாடு மற்றும் மாநிலத்தின் சூதாட்டக் கொள்கைகளுக்கு ( gambling policies) ஏற்ப செயலிகள் அனுமதிக்கப்படும் எனக் கூறியுள்ளது. அதோடு அனுமதிக்கப்படும் நாடுகளில் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற விவரங்களை தொழில்நுட்ப நிறுவனம்
இன்னும் வெளியிடவில்லை.
இருப்பினும் இந்தியாவிலேயே பல்வேறு மாநிலங்களில் சூதாட்ட செயலிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும் சில மாநிலங்களில் தடையும் செய்யப்பட்டுள்ளளது. இந்தியாவில் ஸ்கில்ஸ் (skill)
அடிப்படையாகக் கொண்ட Rummy Circle மற்றும் Dream 11 போன்ற சூதாட்டப் பயன்பாடுகள் சட்டப்பூர்வமானவை.
எனினும் சிக்கிம், கேரளா மற்றும் நாகாலாந்து போன்ற சில மாநிலங்கள் சூதாட்ட செயலிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதத்துள்ளன. அதே வேளையில், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு போன்ற சில மாநிலங்கள் அத்தகைய செயலிகளை தடை செய்துள்ளன.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/technology/tech-news-technology/android-users-in-india-will-soon-see-more-gambling-apps-on-google-play-store-9107628/
இந்த அறிவிப்பு சூதாட்ட செயலிகளால் ப்ளே ஸ்டோர் நிரம்பி வழியும் என்று அர்த்தமில்லை. கூகுளின் தற்போதைய கொள்கையின்படி, டெவலப்பர்கள் தீவிரமான பயன்பாட்டுச் செயல்முறையை மேற்கொள்ள வேண்டும், அதற்கு அவர்கள் ஆப்ஸைத் தொடங்க விரும்பும் நாடு அல்லது மாநிலத்தில் சூதாட்டச் செயல்பாட்டை நடத்த சரியான உரிமத்தைப் பெற வேண்டும் என்பதாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.