New Update
/indian-express-tamil/media/media_files/hJajVZg7hlfH2Z0yayfx.jpg)
தமிழ்நாட்டைச் சேர்த்த ஸ்டார் அப் நிறுவனமான 'ஸ்பேஸ் ஸோன்' இந்த மீண்டும் பயன்படுத்தக் கூடிய (ரீயுசபிள்) ராக்கெட்டை வடிவமைத்துள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்த்த ஸ்டார் அப் நிறுவனமான ஸ்பேஸ் ஸோன் நிறுவனமும், மார்ட்டின் குழுமமும் இணைந்து 'மிஷன் ரூமி 2024' என்ற பெயரில், மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டை உருவாக்கியுள்ளன.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ரீயுசபிள் ஹைப்ரிட் ராக்கெட்டான ரூமி 1(RHUMI 1) 3 சோதனை செயற்கைக் கோள்களுடன் இன்று(ஆக.24) சென்னை அடுத்த மாமல்லபுரம் அருகே திருவிடந்தை கடற்கரையில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவிப்பட்டது. இன்று காலை 7 மணி அளவில் விண்ணில் ஏவப்பட்டது.
3.50 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட் வானில், 80 கி.மீ. உயரத்தில் பறக்கக்கூடிய திறன் கொண்டது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டால், ஒரே ராக்கெட்டை பயன்படுத்தி, பல முறை செயற்கைக்கோளை ஏவலாம். இதனால் செலவு மிச்சமாகும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#WATCH | India launches its first reusable hybrid rocket, RHUMI 1. The rocket, developed by the Tamil Nadu-based start-up Space Zone India and Martin Group was launched from Thiruvidandhai in Chennai using a mobile launcher. It carries 3 Cube Satellites and 50 PICO Satellites… pic.twitter.com/Io97TvfNhE
— ANI (@ANI) August 24, 2024
மொபைல் லாஞ்சரைப் பயன்படுத்தி இந்த ராக்கெட் ஏவப்பட்டது. இது 3 கியூப் செயற்கைக் கோள்கள் மற்றும் 50 பி.ஐ.சி.ஓ செயற்கைக் கோள்களை துணை சுற்றுப் பாதைக்கு கொண்டு சென்று நிலைநிறுத்துகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.