New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/27/0MC36jrQSOpYAQHD2mCW.jpg)
மைக்ரோசிப் இ-பாஸ்போர்ட் என்றால் என்ன? விண்ணப்பிப்பது எப்படி?
பாஸ்போர்ட் சேவா திட்டம் 2.0ன் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்த இ-பாஸ்போர்ட் திட்டம் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இது போலி மற்றும் சேதமடைவதை தடுக்கிறது. இ-பாஸ்போர்ட் மக்களின் தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பாகச் சேமித்து, நன்பக தன்மையை அதிகப்படுத்தி உள்ளன.
மைக்ரோசிப் இ-பாஸ்போர்ட் என்றால் என்ன? விண்ணப்பிப்பது எப்படி?
ஒருவர் தனது நாட்டில் இருந்து வேறு நாடுகளுக்கு, அதாவது வெளிநாட்டிற்கு பயணம் செய்ய விரும்பினால், பாஸ்போர்ட் தேவை. பாஸ்போர்ட் நாட்டின் குடிமகனாக ஒருவரை அடையாளம் காட்டும் சர்வதேச ஆவணம் ஆகும். இந்தியா, தற்போது பாஸ்போர்ட் சேவா திட்டம் 2.0 இன் கீழ், இ-பாஸ்போர்ட்கள் வழங்க தொடங்கியுள்ளது. இ-பாஸ்போர்ட் என்றால் என்ன? வழக்கமான பாஸ்போர்ட்டிலிருந்து வேறுபட்டதா? இ-பாஸ்போர்ட் வந்த பிறகு தற்போது பயன்படுத்தப்படும் காகித வடிவிலான பாஸ்போர்ட் பயனற்றதாகிவிடுமா? என பல கேள்விகள் எழுகின்றன.
இந்தியா கடந்த ஆண்டு இ-பாஸ்போர்ட்டுகளை வழங்கத் தொடங்கியது. ஏப்ரல் 1, 2024 அன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்ட இந்த இ-பாஸ்போர்ட் வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) சேவா யோஜனா 2.0 பைலட் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இந்த அதிநவீன மின்னணு பாஸ்போர்ட்டுகள் பாதுகாப்பை மேம்படுத்தவும், இந்திய குடிமக்களின் பயணச் செயல்முறையை சீராக்கவும் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
பாரம்பரிய பாஸ்போர்ட் அம்சங்களுடன் மேம்பட்ட தொழில்நுட்பத்தை இணைத்து, சிப்கள் அடங்கிய இந்த இ-பாஸ்போர்ட் மக்களின் தனிப்பட்ட தரவை பாதுகாப்பாக சேமித்து, நன்பக தன்மையை அதிகப்படுத்தி உள்ளன. இந்த முயற்சி பாஸ்போர்ட் முறையை நவீனமயமாக்குவதையும், செயல்திறனை மேம்படுத்துவதையும், சர்வதேச பயணத்திற்கான மிகவும் பாதுகாப்பான மற்றும் வசதியான ஆவணத்தை பயணிகளுக்கு வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இ-பாஸ்போர்ட் இந்தியா முழுவதும் நாக்பூர், புவனேஸ்வர், ஜம்மு, கோவா, சிம்லா, ராய்ப்பூர், அமிர்தசரஸ், ஜெய்ப்பூர், சென்னை, ஹைதராபாத், சூரத், ராஞ்சி மற்றும் டெல்லி ஆகிய 13 நகரங்களில் கிடைக்கிறது.
இ-பாஸ்போர்ட் என்றால் என்ன?
இ-பாஸ்போர்ட் என்பது பாரம்பரிய பாஸ்போர்ட்டின் நவீன மேம்பட்ட பதிப்பாகும். இது பயணிகளுக்கு பாதுகாப்பு மற்றும் வசதியை மேம்படுத்த அதிநவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கியது. இது அடிப்படையில் ஒரு நிலையான பாஸ்போர்ட், ஆனால் அதன் அட்டையின் உள்ளே ரேடியோ அதிர்வெண் அடையாள RFID சிப் உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த சிப்பில் பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் பெயர், பிறந்த தேதி, பாஸ்போர்ட் எண், பயோமெட்ரிக் தகவல்கள் அதாவது முக அங்கீகாரத்திற்கான தரவு மற்றும் கைரேகைகள் என தனிப்பட்ட விவரங்களும் சேமிக்கப்பட்டு இருக்கும். பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் அடையாளத்தை மிக துல்லியமாக சரிபார்க்க உதவுகிறது. இ-பாஸ்போர்ட் போலி பாஸ்போர்ட்கள் (அ) சேதப்படுத்துதலைத் தடுக்கிறது. இதனால் பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான பயண ஆவணத்தை வழங்குகிறது.
இ-பாஸ்போர்ட் ஏன் முக்கியமானது?
இ-பாஸ்போர்ட் முயற்சியின் முதன்மை நோக்கம், மேம்பட்ட RFID சிப் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கடவுச்சீட்டு மோசடியை திறம்பட தடுப்பதாகும். இது போலி அல்லது நகல் பாஸ்போர்ட்களை உருவாக்குவதைத் தடுக்க உதவுவது மட்டுமல்லாமல், மற்ற நாடுகளுக்கு செல்லும் போது அடையாளச் சரிபார்ப்பு செயல்முறையை கணிசமாக துரிதப்படுத்துகிறது. தற்போது, இந்த புதுமையான இ-பாஸ்போர்ட் சேவைகள் 12 நகரங்களில் கிடைக்கின்றன. இது மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் செயல்திறனை வழங்குகிறது. இது பாதுகாப்பான பயணத்தை நாடு முழுவதும் அணுகக்கூடியதாக மாற்றுகிறது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
பாஸ்போர்ட் சேவா இணையதளத்தை அணுகவும். ஒரு அக்கவுண்ட் உருவாக்கவும் அல்லது உள்நுழையவும், பின் இ-பாஸ்போர்ட் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும். உங்களுக்கு விருப்பமான பாஸ்போர்ட் சேவா கேந்திரா (PSK) அல்லது தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவா கேந்திரா (POPSK) ஐ தேர்வு செய்யவும். இ-பாஸ்போர்ட் கட்டணத்தை செலுத்துங்கள். ஸ்லாட்டை முன்பதிவு செய்யுங்கள். பயோமெட்ரிக் தரவு மற்றும் ஆவண சரிபார்ப்புக்காக PSK அல்லது POPSK-ல் திட்டமிடப்பட்ட சந்திப்பில் ப்
தற்போது புழக்கத்தில் உள்ள காகித வடிவிலான பாஸ்போர்ட் இன்னும் செல்லுபடியாகும். உடனடியாக அதை மாற்ற வேண்டிய அவசியமில்லை. பாஸ்போர்ட்டின் காலாவதி தேதியே அதன் செல்லுபடியாகும் தேதியாகும். பாஸ்போர்டை புதுப்பிக்கும்போது, உங்கள் பாஸ்போர்ட் மையம் இ-பாஸ்போர்ட் சேவைகளை வழங்கத் தொடங்கியிருந்தால், புதிய வகை பாஸ்போர்ட் கிடைக்கும். எனவே நீங்கள் எந்த தனி செயல்முறையையும் மேற்கொள்ள வேண்டியதில்லை. இதற்கு நீங்கள் பாஸ்போர்ட் சேவா வலைத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஏற்கனவே இ-பாஸ்போர்ட்களைப் பயன்படுத்துகின்றன. 100க்கும் மேற்பட்ட நாடுகள் தற்போது இ-பாஸ்போர்ட்டுகளை வழங்குவதாக சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (ஐசிஏஓ) கூறுகிறது. தற்போது, மொத்தம் 140 நாடுகள் இ-பாஸ்போர்ட்களை செயல்படுத்தியுள்ளன, மேலும் உலகளவில் 1 பில்லியன் மக்கள் இ-பாஸ்போர்ட்களை வைத்திருப்பதாக ஐசிஏஓ கூறுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.