மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) வியோமித்ரா என்ற பெண் ரோபோ விண்வெளி வீராங்கனையை விண்வெளிக்கு அனுப்ப உள்ளது. இதுகுறித்து நேற்று (புதன்கிழமை) ஆஜ் தக் நிகழ்ச்சியில் பேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பபடும் முன்னதாக அடுத்த ஆண்டு வியோமித்ரா சோதனை திட்டம் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
ககன்யான் திட்டம் மனித விண்வெளிப் பயணத்தில் இந்தியாவின் திறனை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் பேசிய அவர், , விண்வெளி ஆய்வு மற்றும் ஆழ்கடல் வள ஆய்வு ஆகிய இரண்டிலும் இந்தியாவின் திறமையை வலியுறுத்தும் வகையில், வரவிருக்கும் ஆழ்கடல் பணி திட்டம் 3 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்ப்பதாக கூறினார்.
இந்தியாவின் விண்வெளித் துறையின் வளர்ச்சியைப் பற்றி உரையாற்றிய டாக்டர். சிங், நாட்டின் விண்வெளிப் பொருளாதாரம், தற்போது $8 பில்லியன் மதிப்புடையது, 2040-க்குள் $40 பில்லியனை எட்டும் என்று மதிப்பிடுவதாக கூறினார்.
தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியின் சீர்திருத்தங்களால், விண்வெளி ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை 190 ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் கூறினார். ஏப்ரல் வரை தனியார் விண்வெளி முதலீடு ரூ. 1,000 கோடி கடந்ததாக கூறினார்.
இஸ்ரோவின் பங்களிப்புகளை எடுத்துரைத்த டாக்டர். சிங், இன்றுவரை 430க்கும் மேற்பட்ட வெளிநாட்டு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி, செயற்கைக்கோள் ஏவுதல் மூலம் வெளிநாட்டு வருவாய் ஈட்டி உள்ளதாகவும் அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“