New Update
00:00
/ 00:00
ஸ்பேஸ்எக்ஸ் சேவையை முதன்முறையாகப் பயன்படுத்தி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது தகவல் தொடர்பு செயற்கைக் கோளான ஜிசாட்-20 செயற்கைக் கோளை எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் தனியார் விண்வெளி நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் இந்த ஆண்டு அனுப்ப உள்ளது.
4,000 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட செயற்கைக் கோள்களை அனுப்ப இந்தியா ஐரோப்பிய ஏவுதல் வழங்குநரான ஏரியன்ஸ்பேஸை நம்பியிருந்தது. ஏரியன்ஸ்பேஸ் (Arianespace) ராக்கெட்டான Ariane-5 பயன்படுத்தி வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலையில் இந்த ராக்கெட் ஓய்வு பெற்றது. தொடர்ந்து Ariane-6 ராக்கெட் இன்னும் அறிமுகமாகவில்லை.
பால்கன்-9 (Falcon-9) ஒரு மறுபயன்பாட்டு ராக்கெட்(reusable rocket) 8,300 கிலோவுக்கு மேல், இரு மடங்கு எடையை சுமந்து செல்லும். விண்வெளியில் பல்வேறு இடங்களுக்கு 285 ராக்கெட்களை இயக்கியுள்ளது. கடந்த ஆண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் ஏவுகணை ஒப்பந்தம் செய்து கொண்ட இஸ்ரோவின் வணிகப் பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்.எஸ்.ஐ.எல்) மூலம் பால்கன்-9-ல் இந்திய செயற்கைக் கோள் ஏவுதல் எளிதாக்கப்பட்டது.
என்.எஸ்.ஐ.எல் நேற்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், என்.எஸ்.ஐ.எல் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ்
இடையிலான ஒப்பந்தத்தின் மூலம் GSAT-20 ஏவுதல் Falcon-9 ராக்கெட்டில் ஏவப்பட உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/technology/science/spacex-indian-communications-satellite-9093611/
GSAT-20, நாட்டின் கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளில் உள்ள அதிவேக இணைப்பு இடைவெளிகளை சரிசெய்து, விமானத்தில் இணைய சேவைகளையும் செயல்படுத்தும், ஆரம்பத்தில் 2018 இல் ஏவப்பட்டு பின்னர் 2020 இல் தொடங்க திட்டமிடப்பட்டது. என்.எஸ்.ஐ.எல் கூற்றுப்படி, இந்த செயற்கைக் கோள் மூலம் அந்தமான், நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகள் உள்படநாடு முழுவதும் உயர்தர மற்றும் அதிவேக டேட்டா வழங்குவதை உறுதி செய்வதாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.