உலகக் கோப்பை ஆடவர் கிரிக்கெட் போட்டி இம்முறை இந்தியாவில் நடைபெறுகிறது. குஜராத், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஸ்டேடியத்தில் போட்டி நடைபெற்று வருகிறது. அக்டோபர் 5-ம் தேதி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கோலாகலமாகத் தொடங்கியது.
இந்நிலையில் இன்று (அக்.8) இந்தியா தனது முதல் உலகக் கோப்பை 2023 ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் மதியம் 2 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
இந்நிலையில் பலர் ஸ்டேடியத்திற்கு சென்றும், டி.வியிலும் பார்ப்பர். இருப்பினும் போட்டியை நீங்கள் இருந்த இடத்தில் இருந்து உங்கள் விருப்பம் போல் ஸ்மார்ட் போனிலும் பார்க்கலாம். அதுவும் இலவசமாக.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆப் மூலம் ஆங்கிலம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு மொழிகளில் போட்டியை இலவசமாக கண்டு ரசிக்கலாம். 480p ஸ்ட்ரீமிங் தரத்துடன் ஒளிபரப்படுகிறது. அதே நேரத்தில் ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாதாரர்கள் 1080p ஸ்ட்ரீமிங் தரத்தில் போட்டியை காணலாம். ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா திட்டம் ஆண்டுக்கு ரூ.1,499 ஆகும். கூகுள் பிளே ஸ்டோரில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆப் டவுன்லோடு செய்து
இந்தியா- ஆஸ்திரேலியா போட்டியை வீட்டில் இருந்தே இலவசமாக கண்டு மகிழுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“