Amitabh Sinha
Indian anti-satellite test mission shakti debris : நாசாவின் ஆர்பிட்டல் டெப்ரீஸ் ப்ரோகிராம் ஆபிஸ் வெளியிட்ட Orbital Debris Quarterly News என்ற செய்தி அறிக்கையில், விண்வெளியில் 101க்கும் மேற்பட்ட மிகப்பெரிய கழிவு பொருட்கள் சுற்றி வருகிறது என அறிவித்துள்ளது.
மிகச்சிறிய விண்வெளி இடர்பாடுகளும் விண்வெளியை சுற்றி வருகின்றன என்றும், ஆனால் அவற்றை ட்ராக் செய்ய இயலவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 27ம் தேதி அன்று, எதிரிகளின் விண்வெளி இலக்கினை தாக்கி அழிக்கும் இந்திய விண்கலமான மைக்ரோசாட் ஆர் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
உலக அரங்கில் நான்காவது நாடாக இந்த சோதனையில் வெற்றி பெற்றது இந்தியா. இதன் எடை 740 கிலோ ஆகும். விண்வெளியில் இலக்கினை எதிர்த்து தாக்குதல் நடத்தியதால் அங்கு பெரும் குப்பை மற்றும் கழிவுகள் உருவாகியுள்ளதாக அறிவித்தது நாசா.
அளவில் மிகப் பெரிதாக இருக்கும் அந்த இடர்பாடுகளால், நன்றாக இயங்கி வரும் செயற்கோள்களுக்கு பாதிப்பினை உருவாக்கும். ஆனால் இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்ற போது, பூமியில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் தான் இந்த சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றும், வெடித்து சிதறிய பொருட்கள் அதுவாகவே பூமிக்கு வந்துவிடும் என்றும் அறிவித்தது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்திடம் பேசிய போது, 45 நாட்களில் அது பூமிக்கு வந்துவிடும் அல்லது விண்வெளியிலேயே எரிந்துவிடும் என்றும் டி.ஆர்.டி.ஒ அதிகாரி அறிவித்தார். பெரிய இடர்பாடுகள் தானகவே அழியத்துவங்கிவிடும் என்றும் கூறினார்கள்.
ஆனால் நாசாவின் ஜிம் ப்ரிடென்ஸ்டைன் கூறுகையில் இந்தியாவின் சோதனை முயற்சியால் உருவான இந்த சேதாரங்கள் விண்வெளியில் இருக்கும் ஆராய்ச்சி மையத்திற்கும் (International Space Station) சேதாரத்தை விளைவிக்கும் என்று அறிவித்துள்ளார்.
இந்த சோதனையின் முடிவில் 400க்கும் மேற்பட்ட இடர்பொருட்கள் விண்வெளியில் உருவாகின. அவற்றில் 60 பொருட்களை ட்ராக் செய்ய முடிந்தது. 24 இடர்பொருட்கள் சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு மிக அருகில் பயணிப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க : இலக்கை நோக்கி சீராக பயணிக்கும் சந்திரயான் 2
நாசா வருத்தம் தெரிவித்தாலும், விண்வெளியில் மொத்தமாக 19,404 என்ற எண்ணிக்கையில் மிகப் பெரிய அளவிலான குப்பைகள் மிதந்து வருகின்றன. அதில் ராக்கெட்களால் ஏற்பட்ட கழிவுகள் மட்டும் 14,432. இதோடு ஒப்பிடும் போது மிஷன் சக்தியின் குப்பைகள் மிகக் குறைவு தான்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.