/tamil-ie/media/media_files/uploads/2018/12/cats-14.jpg)
#IndianElection2018
#IndianElection2018 : இந்த ஐந்து மாநிலத் தேர்தல்களின் முடிவுகள் நிச்சயமாக அடுத்த வருட பொதுத்தேர்தலில் மாற்றங்களைக் கொண்டு வரும் என்பது அனைவரும் கணித்தது. ஆனால் ட்விட்டரில் லேட்டஸ்ட் ட்ரெண்டாக மாறும் என யாருமே நினைத்துப் பார்க்கவில்லை. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மற்றும் மிசோரம் மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள் நடந்து முடிவடைந்துள்ளன.
தேர்தல் தேதி அறிவிப்புத் தொடங்கி, வேட்பு மனுத்தாக்கல், பிரச்சாரம், தேர்தல், தேர்தல் முடிவுகள் என பல கட்டங்களில் ட்விட்டரில் அதிகம் பதியப் பட்ட ஹேஷ் டேக் #IndiaElections2018 தான். அக்டோபர் 1ம் தேதி தொடங்கி, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட டிசம்பர் 11ம் தேதி வரை சுமார் 70 லட்சம் முறை இந்த ஹேஷ் டேக் டிவிட்டரில் பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க : மூன்று மாநில முதல்வர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு ராகுலுக்குத் தான்
அதிகம் பேசப்பட்ட பிரச்சனைகள்
கிராமப்புற பொருளாதாரம், மதம், ஜாதி, மின்சார வாக்குப்பதிவு இயந்திரம், மற்றும் வாக்கு போன்ற ஐந்து முக்கியமான விசயங்கள் பற்றி மக்கள் அதிகம் பேசியுள்ளனர். இது மட்டும் அல்லாமல், கட்சி தரப்பில் தரப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள், தற்போது அம்மாநிலங்கள் சந்தித்து வரும் முக்கியமான பிரச்சனைகள், கட்சி அறிவிப்புகள் ஆகியவையும் ட்விட்டர் தளத்தில் மிக முக்கியமான பேசும் பொருளானது.
நவம்பர் 28ம் தேதி ராஜஸ்தானில் 50 லட்சம் வேலை வாய்ப்புகள் என்ற டாபிக் அதிகம் பேசப்பட்டது. டிசம்பர் 7ம் தேதி குடும்ப ஆட்சி மற்றும் மதத் தலைவர்கள் என்ற டாபிக்கும் அதிகம் பேசப்பட்டது. நரேந்திர மோடி தான் அதிகம் குறிப்பிடப்பட்ட தேசத்தலைவர். அவரைத் தொடர்ந்து ராகுல் காந்தி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத், அகிலேஷ் யாதவ் ஆகியோர்களின் பெயர்களும் அதிகம் பயன்படுத்தப்பட்டது.
/tamil-ie/media/media_files/uploads/2018/12/polls-twitter1-copy.jpg)
#IndianElection2018 ஹேஷ்டேக் குறித்து ட்விட்டர் இந்தியா
இந்த கருத்துக் கணிப்பு தொடர்பாக ட்விட்டர் இந்தியாவின் மக்கள் மற்றும் அரசு தொடர்பு அதிகாரி மஹிமா கவுல் கூறுகையில், ட்விட்டர் தான் அரசியல் பற்றி அதிகம் பேசப்படும் தளமாக இயங்குகிறது. இந்த ஐந்து மாநிலத் தேர்தல்கள் குறித்து பிராந்திய மொழிகளிலும் அதிகப்படியான கருத்துகள் பகிரப்பட்டிருப்பதையும் நாங்கள் கவனித்து வந்தோம் என்று அவர் கூறியிருக்கிறார்.
தேர்தல் குறித்த தகவல்கள் மற்றும் மக்களின் கருத்துகளை அறிந்து கொள்ள உருவாக்கப்பட்டது தான் #IndiaElections2018 என்ற ஹேஷ்டேக். அதில் வோட்டட் எமோஜியும் இணைக்கப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.