Indian scientist Ajayan Vinu works on nano material : காற்றில் இருக்கும் கார்பன் டை ஆக்ஸைடுடன் சூரிய வெளிச்சம் மற்றும் நீர் சேர்த்தால் எரிபொருளை உருவாக்கலாம். இந்த ஆராய்ச்சி குறித்து தான் பல ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றார்கள். எந்த எரிபொருள் உருவாக்கத்தால் பல்வேறு நன்மைகள் உருவாகும். மேலும் வாகனங்கள் வெளியிடும், நச்சுப் பொருட்களில் இருந்து உலகை காப்பாற்றலாம். ஏன் என்றால் புதிய கண்டுபிடிப்பு மூலம் வெளியிடப்படும் புகையில் நச்சு ஏதும் இல்லை. அதே நேரத்தில் தொடர்ந்து குறைந்து வரும் எரிபொருள் பிரச்சனைகளில் இருந்து உலகம் தப்பித்துக் கொள்ளும்.
ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்து வரும் அஜயன் வினு என்ற பேராசிரிய நியூகேசில் பல்கலைக்கழகத்தில் வேலை பார்த்து வருகிறார். க்ளோபல் இன்னோவேசன் துறையின் தலைவராகவும் இயக்குநராகவும் இருக்கும் இவர் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் சூரிய வெளிச்சம், மற்றும் தண்ணீர் ஆகியவை சேர்த்து எரிபொருள் உருவாக்க இயலும் என்று கண்டறிந்துள்ளார். சோடியம் அயன் பேட்டரிகளில் இதன் சக்தியை சேமித்து வைத்து எலெக்ட்ரிக் வாகனங்களையும் இயக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியான இவருடைய இந்த ஆக்கப்பணிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அவருக்கு 2 மில்லியன் டாலர்கள் நிதி உதவி வழங்கியுள்ளது. கார்பன் நைட்ரைட் நானோ மெட்டிரீயல்கள் மூலம் உருவாக்கப்படும் எரிசக்தி தொடர்பாக அவர் தொடர்ந்து ஆராய்ச்சியை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான முழுமையான கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
வெளிநாட்டில் இருக்கும் இந்தியர் ஒருவருக்கு இந்தியா இவ்வளவு பெரிய வெகுமதியை அளிப்பது இதுவே முதன்முறையாகும். 43 வயதான அஜயன் வினு 107வது இந்தியன் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்ட முக்கியமான பேச்சாளர்களில் ஒருவராவார். இது குறித்து அவர் பேசும் போது, இது 2 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய ஒரு திட்டம் ஆகும். இந்திய பாதுகாப்புத்துறையினர் இதே போன்ற திட்டங்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அது அவ்வளவு எஃபெக்டிவாக இல்லை. அதனால் தான் அதனை மாற்ற முயற்சி செய்து வருகிறார்கள். கார்பன் டை ஆக்ஸ்டைடோடு சேர்ந்த நானோ போரஸ் கார்பன் மூலம் உருவாக்கப்படும் எரிசக்தி குறித்து இந்த ஆராய்ச்சி நடைபெற உள்ளது. வெளிநாட்டில் இருக்கும் ஒரு ஆராய்ச்சியாளருக்கு இந்தியா தரும் முதல் ஆராய்ச்சி திட்டம் இதுவாகும் என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் இருந்து இந்த தொழில்நுட்பத்தை பார்த்து செயல்படுத்த ஒரு மூத்த பாதுகாப்புத்துறை அதிகாரி ஆஸ்திரேலியா செல்ல உள்ளார். “நான் கண்டுபிடித்த பொருட்கள் – சி 3 என் 5, சி 3 என் 6, சி 3 என் 7 போன்ற கார்பன் நைட்ரைடுகள் ஆகும். இந்த பொருட்களுக்கு தனித்துவமான மின்சாரத்தை கடத்தும் பண்புகள் ( Semi Conducting) இருப்பதை கண்டறிந்த, உயர்மட்ட நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
நானோ மெட்டீரியல்கள் பயன்படுத்தி ஒரு வாகனத்தை இயக்க முடியும் என்பதை உறுதி செய்துள்ளது அவர் கண்டுபிடித்த ஹைலி ஆர்டர்ட் கார்பன் நைட்ரைட்கள். அனைத்து முக்கிய அமைப்புகளிலும் இதனை பயன்படுத்த இயலும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. உலோகம் இல்லாத போட்டோ வினையூக்கியாகவும், கார்பன் பிடிப்பு மற்றும் கன்வெர்சனுக்கு உலோகமற்ற அமைப்பாகவும், சூப்பர் கெப்பாசிட்டர்கள் மற்றும் பேட்டரிகளில் எலக்ட்ரோடுகளாகவும், ஃப்யூல் செல்களில் எலக்ட்ரோடு கேட்டலிஸ்ட்டுகளாகவும், சோலர் செல்களில் எலெக்ட்ரோடுகளாகவும் பயன்படுத்தப்படும்.
இது போன்று காற்றில் இருக்கும் கார்பன் டை ஆக்ஸைடுடன் சூரிய வெளிச்சம் மற்றும் நீர் ஆகியவை சேர்த்து உருவாக்கப்படும் ஹைட்ரஜன் எரிபொருள் கொண்டு வாகனங்கள் செயல்பட 2024 – 2025 ஆண்டுகள் இலக்காக வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனித்தனி தேவைக்கும் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இவை அனைத்தையும் ஒன்றிணைக்கும் பணி மட்டுமே மிச்சம் என்றும் அறிவித்துள்ளார் அவர்.