New Update
/indian-express-tamil/media/media_files/5efRee7XB06yxtqSF9Jp.jpg)
லடாக்கில் உள்ள இந்தியாவின் முதல் ஃபுல்லி ரோபோடிக் ( fully robotic ) GROWTH-டெலஸ்கோப், ஜூலை 25 (வியாழன்) அன்று பூமியை மிக நெருக்கமாக கடந்த சென்ற ஒரு பெரிய சிறுகோளை படம் எடுத்துள்ளது.
இந்த சிறுகோள் ஒரு பெரிய கட்டிடத்தின் அளவு கொண்டது என்று விஞ்ஞானிகள் கூறினர்.
பூமிக்கு அருகில் வந்த சிறுகோள் என வகைப்படுத்தப்பட்ட, '2011 MW1' நமது கிரகத்தை மணிக்கு 28,946 கிலோமீட்டர் வேகத்தில்கடந்து சென்றது. சந்திரனுக்கு பத்து மடங்கு தொலைவில் வந்தது.
இந்த சிறுகோள், லடாக்கின் ஹான்லேயில் உள்ள இந்திய வானியல் ஆய்வகத்தில் அமைந்துள்ள நாட்டின் முதல் fully ரோபோடிக் ஆப்டிகல் ஆராய்ச்சி தொலைநோக்கி மூலம் படம் எடுக்கப்பட்டன.
Last night, the GROWTH-India Telescope caught this 116m, building-sized asteroid on its closest approach to earth! We tracked the rapid motion of the asteroid as it zipped across the sky at just 10x lunar distance. The rapid motion makes background stars look like streaks. pic.twitter.com/gbbT8yxqsP
— Varun Bhalerao (@starlabiitb) July 26, 2024
ஐஐடி பாம்பேயின் ஸ்டார் ஆய்வகத்துடன் தொடர்புடைய வானியற்பியல் வல்லுநர் வருண் பலேராவ் இந்த சிறுகோளின் படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அது எவ்வளவு விரைவாக பூமியை கடந்தது என்றும், அதன் பின்னாளில் உள்ள நட்சத்திரங்களையும் அதில் காண்பிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.