ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் 4ஜி ஜியோ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி வெற்றி கண்டது. அந்தவரிசையில் ரூ.15,000 மதிப்பில் பிரத்தியேக ஜியோ ஓஎஸ் வசதியுடன் பட்ஜெட் லேப்டாப் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோபுக்கிற்காக உலகளாவிய நிறுவனங்களான குவால்காம் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக இந்த மாதம் முதல் பள்ளி மாணவர்கள் மற்றும் அரசுத்துறை நிறுவனங்களுக்கு ஜியோ லேப்டாப் விற்பனை செய்யப்பட உள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஜியோ 5ஜி போனும் அறிமுகப்படுத்த திட்டம் உள்ளதாக கூறப்படுகிறது.
ஜியோபுக் உள்நாட்டிலேயே Flex ஒப்பந்த உற்பத்தியாளர் மூலம் தயாரிக்கப்பட உள்ளது. ஆராய்ச்சி நிறுவனமான ஐடிசி தரவுகள் படி, இந்தியாவில் ஒட்டுமொத்த கம்ப்யூட்டர் ஏற்றுமதி கடந்த ஆண்டு 14.8 மில்லியன் யூனிட்களாக இருந்தது. ஜியோ லேப்டாப் 4ஜி சிம் கார்டு வசதியுடன் அறிமுகப்படுத்த உள்ளது. மேலும் இந்த லேப்டாப் பிரத்தியேக ஜியோ ஓஎஸ்-இல் (JioOS operating system) இயங்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil