New Update
00:00
/ 00:00
இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ சீரிஸ் போன்கள் குறைந்த விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சீரிஸில் இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ மற்றும் இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ+ ஆகிய 2 போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டும் மிகக் குறைந்த விலையில் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் வரும் போன்களாக உள்ளன.
இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ சீரிஸ் சிறப்பம்சங்கள்
இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ சீரிஸ் போன்கள் 5ஜி வசதியை கொண்டுள்ளன. இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ-ன் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வெர்ஷன் போன் ரூ.21,999 விலைக்கும்,
இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ+ உடைய 12ஜிபி ரேம் +256ஜிபி ஸ்டோரேஜ் வெர்ஷன் போன் ரூ. 24,999 விலைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இரண்டு போன்களும் ஒரே மாதிரியான சிறப்பம்சங்களை கொண்டுள்ளன. பேட்டரி மற்றும் சார்ஜிங் வசதியில் தான் வேறுபாடு உள்ளன. 6.78-இன்ச் FHD+ வளைந்த AMOLED டிஸ்ப்ளேவுடன் 120Hz புதுப்பிப்பு வீதம், 1300 nits வரை உச்ச பிரகாசம் மற்றும் 2160Hz PWMDimming கொண்டுள்ளன.
பேனலில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பும் உள்ளது. இந்த போன்கள் மீடியாடெக் டைமென்சிட்டி 7020 6 என்.எம் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.
Infinix Note 40 Pro தொடரானது OIS உடன் 108 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபிக்கு முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் கேமராவைக் கொண்டுள்ளது.
Infinix Note 40 Pro+ ஆனது 100W சார்ஜிங் ஆதரவுடன் 4,600mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. Infinix Note 40 Pro, 45W வேகமான சார்ஜிங் வசதியில் 5,000mAh பேட்டரியை வழங்குகிறது. இரண்டு சாதனங்களும் 20W வயர்லெஸ் MagCharge சப்போர்ட் கொண்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.