New Update
/indian-express-tamil/media/media_files/2025/08/11/infinix-note-50s-5g-2025-08-11-20-20-15.jpg)
5ஜி, 3D கர்வ்டு டிஸ்பிளே, 64 MP சோனி கேமிரா... ரூ.16,000 பட்ஜெட்டில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன்!
Infinix நிறுவனம் தனது புதிய Infinix Note 50s 5G ஸ்மார்ட்போனை ரூ.15,999 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 144Hz curved AMOLED டிஸ்பிளே கொண்ட இந்தியாவின் மிக மெல்லிய ஸ்மார்ட்போன் என Infinix தெரிவித்துள்ளது.
5ஜி, 3D கர்வ்டு டிஸ்பிளே, 64 MP சோனி கேமிரா... ரூ.16,000 பட்ஜெட்டில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன்!
Infinix நிறுவனம் தனது புதிய Infinix Note 50s 5G ஸ்மார்ட்போனை ரூ.15,999 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 144Hz curved AMOLED டிஸ்பிளே கொண்ட இந்தியாவின் மிக மெல்லிய ஸ்மார்ட்போன் என Infinix தெரிவித்துள்ளது. இந்த போனின் மற்ற முக்கிய அம்சங்கள் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
Note 50s கையில் பிடித்தவுடன் அதன் மெல்லிய மற்றும் இலகுவான வடிவமைப்பு நம்மை ஈர்க்கிறது. பெரிய டிஸ்பிளே, பேட்டரி இருந்தும், இதன் எடை வெறும் 180 கிராம் மட்டுமே. 8mm-க்கும் குறைவான தடிமன் கொண்டது. பர்கண்டி நிறம், மெட்டாலிக் பினிஷிங் உடன் மிகவும் நேர்த்தியாக இருக்கிறது. இதன் ஜெம்-கட் (gem-cut) கேமரா மாட்யூல் தனித்துவமாக உள்ளது. இதுதவிர, டைட்டானியம் கிரே, மரேன் டிரிஃப்ட் ப்ளூ ஆகிய நிறங்களிலும் கிடைக்கிறது. இதில் உள்ள மரேன் டிரிஃப்ட் ப்ளூ நிறத்தில், வீகன் லெதர் பேக் பேனலில் marine notes வரும் சிறப்பு அம்சம் உள்ளது. இதற்கு Infinix 'சென்ட் டெக்' (scent tech) என்று பெயரிட்டுள்ளது.
இந்த போனின் 6.78-இன்ச் FHD+ 3D curved AMOLED டிஸ்பிளே (1080 x 2436 pixels) மிக முக்கிய அம்சம் ஆகும். இதில் 144Hz refresh rate உள்ளது. 100% DCI-P3 வண்ண வரம்பைக் கொண்டுள்ளது. மேலும், இது 10-பிட் வண்ண ஆழத்தை ஆதரிக்கிறது. Gorilla Glass 5 பாதுகாப்புடன் வருகிறது. இந்த டிஸ்பிளேவை தாங்கும் விதமாக 5,500 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி ஒருநாள் முழுவதும் நீடிக்கிறது. 45W சார்ஜர் உடன் கிடைக்கிறது.
Note 50s, MediaTek Dimensity 7300 Ultimate சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 8GB/128GB, 8GB/256GB ஆகிய சேமிப்பக விருப்பங்களில் கிடைக்கிறது. Geekbench benchmark-ன் மல்டி-கோர் சோதனையில் 3194 என்ற மதிப்பெண்ணைப் பெற்றது. விளையாடுபவர்களுக்கு (gamers), பிரத்யேக NPU 665, Mali-G615 GPU மற்றும் MediaTek HyperEngine ஆகியவை 90FPS விளையாட்டை ஆதரிக்கின்றன.
பின்புறத்தில் 64MP Sony IMX682 சென்சார் கொண்ட டூயல் கேமரா உள்ளது. முன்புறத்தில் 13MP செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இது 4K@30FPS வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 10X டிஜிட்டல் ஜூம் போன்ற பல AI அம்சங்களையும் ஆதரிக்கிறது. பெரும்பாலான சூழ்நிலைகளில் கேமரா சிறப்பாகச் செயல்படும். Android 15-ஐ அடிப்படையாகக் கொண்ட Infinix-ன் XOS 15 பயனர் UI பயன்படுத்த எளிதாகவும், தேவையற்ற செயலிகள் இல்லாமல் இருப்பதாகவும் தெரிகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.