Innovative smartphones 2018 : இந்த வருடம், ஸ்மார்ட்போன்கள் தொழில்நுட்பத்தில் நிறைய நிறைய புது ஐடியாக்கள் கொண்டு வரப்பட்டன. வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து புதிய தொழில் நுட்பத்தில் அசத்திய போன்கள் எவையெவை ?
Most innovative smartphones of 2018: Oppo Find X
இந்த வருடத்தில் வெளியான, ஓப்போ நிறுவனத்தின் ஃபைண்ட் எக்ஸ் போன், மிக முக்கியமான போனாகும். ப்ரியம் போன்களுக்கு மிகப் பெரிய சவாலாகவும் போட்டியாகவும் இந்த போன், சந்தைகளில் களம் இறக்கப்பட்டது.
போனின் முன் பக்கம் மற்றும் பின்பக்கம் முழுமையாக கர்வ்ட் க்ளாஸினால் உருவாக்கப்பட்டது.
நோட்ச் எதுவும் இல்லாமல் வெளியான 6.4 இன்ச் ஓ.எல்.ஈ.டி திரை கொண்ட போன் இதுவாகும்.
மோட்டரைஸ்ட் கேமராவுடன் உருவாக்கப்பட்ட இந்த போன் கிட்டத்தட்ட 5 வருடங்கள் வரை தாக்கு பிடிக்கும் என்று கூறியுள்ளது ஓப்போ.
விலை : ரூ. 59,990
Innovative smartphones 2018 : Huawei Mate 20 Pro
சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் போல சொந்தமாக ப்ரோசசர் தயாரித்து, செல்போன்களை உருவாக்குகிறது ஹுவாய் நிறுவனம். இந்த வருடம் வெளியான ஸ்மார்ட் போன்களிலேயே சிறப்பனான ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.
சிறப்பம்சங்கள் :
6.39 அங்குல அளவுள்ள இந்த போனின் திரை OLEDயால் உருவாக்கப்பட்டிருக்கிறது
டிஸ்பிளே ஃபார்மட் 19.5:9
இதன் ரெசலியூசன் 2K+ டிஸ்பிளேயுடன் கூடிய 3120×1440 பிக்சல்களைக் கொண்டிருக்கிறது.
10,000 ரூபாய்க்குள் ஸ்மார்ட்போன்கள் வாங்க வேண்டுமா ?
வேறெந்த போன்களிலும் இல்லாத வகையில் மூன்று பின்பக்க கேமராக்களுடன் வெளியானது ஹூவாய் மேட் 20 ப்ரோ
ஒரு அல்ட்ரா வைட் கேமரா ( 20MP, 16mm, f/2.2 ), வைட் ஆங்கிள் கேமரா (40MP, 27mm, f/1.8 ), மற்றும் டெலிபோட்டோ கேமரா ( 8MP, 3x Telephoto 80mm, f/2.4, OIS) கொண்டிருக்கிறது.
செல்பி கேமரா 24 எம்.பி ( f/2.0 ) திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
விலை : ரூ. 69,990
மேலும் படிக்க : அல்ட்ரா வைட் கேமராவுடன் களம் இறங்கிய ஹூவாய் மேட் 20 ப்ரோ
Innovative smartphones 2018: Vivo NEX Dual Display Edition
விவோ நிறுவனத்தின் விவோ நெக்ஸ் டூயல் டிஸ்பிளே போன், இந்த வருடத்தில் வெளியான மிக முக்கியமான போன்களில் ஒன்றாகும். இரண்டு திரைகளுடன் வல்ம் வர இருப்பது தான் இதன் ப்ளஸ் பாய்ண்ட்.
விவோ நெக்ஸ் 2வும் 10 ஜிபி RAM கொண்டு செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் இண்டெர்நெல் ஸ்டோரேஜ் 128 ஜிபி ஆகும்.
மூன்று ரியர் கேமராவுடன் வெளியாக உள்ளது இந்த போன். இந்தியாவில் எப்போது வெளியாகின்றது என்ற தகவல் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
மேலும் படிக்க : Dual Display, 10GB RAM சிறப்பம்சங்களுடன் வெளியாகும் விவோவின் புதிய போன்
Innovative smartphones 2018: Asus ROG Phone
ஆசூஸ் நிறுவனத்தின் முதல் கேமிங் போன் இதுவாகும். காப்பர் க்ரில்களுடன் கூடிய முன் மற்றும் பின்பக்க அமைப்பு, க்ளோஸி க்ரோம் ஃபினிஸ் என கேமர்களுக்காகவே உருவாக்கப்பட்டது இந்த போன்.
அல்ட்ராசோனிக் ஏர் ட்ரிகர் ட்ச் சென்சார், லேண்ட்ஸ்கேப் மோட், ஏ.எம்.ஓ.எல்.ஈ.டி (AMOLED) திரையுடன் கூடிய ஹெச்.டி.ஆர் பேக்காக வெளியாகியுள்ளது இந்த மொபைல்.
குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 845 ப்ரோசசர் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
கிராபிக்ஸ் ப்ரோசசர் யூனிட்டாக குவால்கோம் அட்ரெனோ 630 பயன்படுத்தப்பட்டிருக்கிறது
விலை : ரூ. 69,999
மேலும் படிக்க : Game-ற்காக வெளியாகும் முதல் போன்... ஆசூஸ் அறிமுகம் செய்கிறது...
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.