New Update
00:00
/ 00:00
இன்ஸ்டாகிராமில் ஸ்னாப்ஷேட்-ல் இருப்பது போன்று வானிஷ் மோட் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது வாட்ஸ்அப்பின் disappearing மெசேஜ் போன்றது தான் செயல்படும். இன்ஸ்டாகிராம் செட்டிங்ஸில் இந்த அம்சத்தை ஆக்டிவேட் செய்தபின் நீங்கள் அனுப்பும் மெசேஜ், போட்டோ, வீடியோ அனைத்தும் மற்ற பயனர் ஓபன் செய்த பின் அது மறைந்து விடும்.
அது ஷேட் பக்கத்தில் இருக்காது. இது குரூப், தனி நபர் ஷேட் ஆகியவற்றிற்கும் பொருந்தும். இருப்பினும் இன்ஸ்டா வானிஷ் மோட் சற்று வித்தியாசமாக இருக்கும். அது எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
இன்ஸ்டாவில் வானிஷ் மோட் எனெபிள் செய்வது எப்படி?
1. உங்கள் ஃபோன் அல்லது டேப்லெட்டில் இன்ஸ்டாகிரம் ஓபன் செய்து, DM செக்ஷனை ஓபன்செய்யவும்.
2. எந்த நபரின் ஷேட் பக்கத்தில் வானிஷ் மோட் எனெபிள் செய்ய வேண்டுமோ அதை ஓபன் செய்து, கீழே இருந்து swipe up செய்யவும்.
3. இப்போது ‘You turned on Vanish Mode’ என்பது காட்டப்படும்.
4. இதை ஆப் செய்ய மீண்டும் அதே போல் ஷேட்டில் swipe up செய்யவும்.
இன்ஸ்டாகிராமில் வானிஷ் மோட் எனெபிள் செய்யப்பட்டால் அந்த மற்ற பயனருக்கு காண்பிக்காது. ஆனால் ஷேட் ஓபன் செய்யும் போது வானிஷ் மோட் எனெபிள் ஆகி உள்ளது என்று காண்பிக்கப்படும். வானிஷ் மோட் turn off செய்யும் போது இதுவரை இருந்த மெசேஜ், போட்டோ என அனைத்தும் ஆட்டோமேட்டிக்காக disappear ஆகிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.