பயனர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் பின்தொடர்பவர்களுடன் இப்போது அதிக இசை, புகைப்படங்கள் மற்றும் ரீல்களைப் பகிர்ந்து கொள்ளலாம். இன்ஸ்டாகிராமில் நண்பர்களுடன் ஃபன் செய்ய 3 புதிய அம்சங்களை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. Carousels, 3 Collaborators, Add Yours sticker அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.
Collaborators மியூசிக்
- முதலில் உங்கள் போனில் இன்ஸ்டாகிராம் செயலி ஓபன் செய்து ஸ்கீரின் கீழே உள்ள பிளஸ் ஐகானை கிளிக் செய்யவும்.
- இப்போது கேலரியில் இருந்து போட்டோ செலக்ட் செய்து அல்லது புதிய போட்டோ எடுத்து Carousels கிரியேட் செய்யவும்.
- ஸ்கீரின் மேலே உள்ள Add music ஆப்ஷனை கிளிக் செய்யவும்.அந்த லிஸ்டில் உள்ள பாடல்களை அல்லது உங்களுக்கு விருப்பமான பாடல்களை தேர்வு செய்யலாம்.
- இப்போது அதை உங்கள் போட்டோவுடன் பயன்படுத்தலாம்.
- கேப்ஷன், லொக்கேஷன் மற்றும் இதர ஆப்ஷகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Collab அம்சம்
மற்றொரு புதிய அம்சம் Collabs ஆகும். இது பயனர்கள் மூன்று நண்பர்களுடன் இணைந்து போஸ்ட், Carousels
அல்லது ரீல் ஆகியவற்றை செய்ய அனுமதிக்கிறது. 3 பேரும் கிரெடிட் மற்றும் உள்ளடக்கத்தின் அணுகலைப் பகிர்ந்துகொள்வார்கள்.
- போஸ்ட் பப்ளிஸ் செய்யும் போது நண்பர்களை டேக் செய்யலாம்.
- Invite collaborators செலக்ட் செய்யவும்.
- எந்த அக்கவுண்டை collaborators ஆக add செய்ய விரும்புகிறீர்களோ அந்த அக்கவுண்டை செலக்ட் செய்யவும்.
- Done ஆப்ஷன் கொடுக்கவும். உங்கள் collaboration-யை அவர்கள் accept செய்தால் உங்கள் போஸ்ட் அவர்கள் ஃபாலோவர்களுக்கு காட்டப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil