இன்ஸ்டாகிராம் செயலி உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்றாக இருக்கிறது. அவ்வப்போது, வாடிக்கையாளர்களை கவர புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கையான அவர்களது விருப்பத்தில் ஹோம்ஃபீடில் போஸ்ட் இருக்க வேண்டும் என்பதை, தற்போது இன்ஸ்டாகிராம் நிறுவனம் செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.
ஹோம்ஃபீடில் Following, Favourites என்ற இரண்டு ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. பயனர்கள் ஃபேவரைட்ஸ் என்ற ஹோம்ஃபீட்டை தேர்ந்தெடுத்தால், தங்களுக்கு பிடித்த கணக்குகளில் இருந்து வரும் பதிவுகளை மட்டும் பார்த்துகொள்ளலாம். ஃபேவரைட் ஆப்ஷனுக்கு சென்று பயனர்கள் தங்களுக்கு பிடித்த 50 கணக்குகளை தேர்ந்தெடுத்து, அந்த தகவலை மட்டும் பார்த்துக்கொள்ளலாம்.

ஒருவேளை ஃபாலோயிங் தேர்ந்தெடுத்தால், அவர்கள் பின் தொடரும் அனைத்து கணக்குகளில் இருந்தும், அதிகம் பார்க்கும் தகவல்களின் அடிப்படையில் பரிந்துரை பதிவுகள் ஹோம் ஃபீடில் இடம்பெறும்.
இன்ஸ்டாகிராம் ஹோம் ஃபீட்-க்கு அல்காரிதம் ஆர்டரை அறிமுகப்படுத்தியது. ஏனெனில், இன்ஸ்டாகிராமை உபேயாகப்படுத்தும் பிராண்ட் நிறுவனங்கள் , அவ்வப்போது போஸ்ட் செய்தன் மூலம், இன்ஸ்டாவில் மக்கள் பதிவிடும் பதிவுகள் ஹோம் ஃபீட்டில் இடம்பெறாத நிலை உருவானது. சில சமயங்களில், தங்கள் நண்பர்கள் போஸ்ட் போடவே இல்லையை என்பது போல் உங்களை நினைத்திட வழிவகுக்கும்.
தற்போது, இன்ஸ்டாகிராமில் வந்துள்ள மாற்றம் நண்பர்களுக்கு, உறவினர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், தொழில் முனைவோர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.
சமீபத்திய ஆண்டுகளாக, இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் பின்தொடராதவரின் கணக்கின் பதிவுகளை தான், அதிகளவில் ஹோம் ஃபீட்டில் காண செய்தது. இதுவே, இன்ஸ்டா ஹோம் ஃபீட்டில் வரும் கன்டனட்களின் கட்டுப்பாடு நம்மிடம் இருக்க வேண்டும் என்கிற விருப்பத்தை பயனாளர்களிடையே ஏற்படுத்தியது.
இனிமேல், ஹோம்ஃபீடை (Home Feed) பயனர்கள் தாங்கள் விரும்பும் வகையில் மாற்றிகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil