New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/11/instagram-logo-ap-2.jpg)
Instagram announces two new features rage shake and finally Tamil News
Instagram announces two new features rage shake and finally Tamil News அமெரிக்காவில் உள்ள ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்காக ‘ரேஜ் ஷேக்’ வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Instagram announces two new features rage shake and finally Tamil News
Instagram announces two new features rage shake and finally Tamil News : இன்ஸ்டாகிராம் இயங்குதளத்தில் இரண்டு புதிய அம்சங்கள் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது நிறுவனம். ஒன்றின் பெயர் 'இறுதியாக' மற்றும் மற்றொன்று 'ரேஜ் ஷேக்' என்றும் அழைக்கப்படுகிறது. இதனை இன்ஸ்டாகிராமின் தலைவரான ஆடம் மொசெரி தனது ட்விட்டர் கணக்கில் ஒரு சிறிய வீடியோவாக வெளியிட்டுள்ளார். இது அம்சங்களைப் பற்றிய நுண்ணறிவை நமக்கு வழங்குகிறது.
முதலாவது, ‘Finally’ அம்சம். இது பயனர்கள் படங்களின் carousel-லிருந்து ஒரு படத்தை நீக்க அனுமதிக்கும். அதாவது, இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்டின் பகுதியாகக் காண்பிக்கும் ஐந்து படங்களை நீங்கள் பதிவேற்றியுள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம், இந்த முழு போஸ்டுகளையும் நீக்குவதற்குப் பதிலாக இவற்றில் ஒரு படத்தை நீங்கள் இப்போது நீக்க முடியும்.
இந்த அம்சம் எவ்வாறு செயல்படும் என்பதையும் வீடியோ விளக்குகிறது. 'இறுதியாக' அம்சம் iOS-ல் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும், எதிர்காலத்தில் ஆண்டிராய்டு பயனர்களுக்கு வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. Mosseri-ன் படி, இந்த அம்சம் கடந்த காலங்களில் பயனர்களால் அதிகம் கோரப்பட்டது. இப்போது அது இறுதியாக வெளிவரத் தொடங்கியுள்ளது.
மற்ற அம்சம் 'ரேஜ் ஷேக்' என்று அழைக்கப்படுகிறது, இது பயனர்கள் சிக்கலை இன்ஸ்டாகிராமில் எளிதாகப் புகாரளிக்க அனுமதிக்கும். இன்ஸ்டாகிராம் சில சமயங்களில், படங்கள் பதிவேற்றப்படாமல் இருப்பது மற்றும் வீடியோக்கள் முடிவில்லாமல் சுருக்கப்படுவதால் வெறுப்படையலாம். 'ரேஜ் ஷேக்' அம்சம் பயனர்கள் தங்கள் தொலைபேசிகளை வெறுமனே ஷேக் செய்து, சிக்கலைப் புகாரளிக்கும் விருப்பத்தைப் பெற அனுமதிக்கும். அமெரிக்காவில் உள்ள ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்காக ‘ரேஜ் ஷேக்’ வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், இன்ஸ்டாகிராம் அதன் Threads பயன்பாட்டையும் மூடுகிறது. இது 2019-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒரு முழுமையான செயலி. இது பயனர்கள் புகைப்படங்கள், வீடியோக்கள், செய்திகள், கதைகள் மற்றும் பலவற்றை இன்ஸ்டாகிராமில் தங்கள் நெருங்கிய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.