New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/29/AyPHTSociSVRSvMZxGy7.jpg)
இன்ஸ்டா பயனர்களுக்கு எச்சரிக்கை: பேட்டரிக்கு ஆபத்து; எச்சரிக்கும் கூகுள்!
கடந்த சில நாட்களாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்கள் இன்ஸ்டாகிராமால் பேட்டரி சீக்கிரம் காலியாவதாக புகார் கூறி வருகின்றனர். இதன் பின்னணியில் செயலில் இல்லாதபோதும் இன்ஸ்டா பேட்டரியை பயன்படுத்துகிறது என்பது தெரியவந்துள்ளது.
இன்ஸ்டா பயனர்களுக்கு எச்சரிக்கை: பேட்டரிக்கு ஆபத்து; எச்சரிக்கும் கூகுள்!
நமது வாழ்க்கைக்கு தேவைப்படும் இன்றியமையாத பொருட்களில் ஓன்றாக ஸ்மார்ட்போன் உள்ளது. போன் என்பது தொலைதொடர்பு சாதனம் என்ற நிலை மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. காலையில் கண் விழித்தது முதல் இரவு படுக்கச் செல்லும் வரை நம் அனைத்து வேலைகளுக்கும் தேவைப்படும் அத்தியாவசிய பொருளாக மாறி விட்டது.இன்றைய டிஜிட்டல் உலகில் நம் வாழ்க்கையை ஸ்மார்ட்போன்கள்தான் இயக்குகின்றன என்றால் மிகையில்லை. இந்நிலையில், ஸ்மார்போனுக்கு உயிர் கொடுக்கும் பேட்டரி அதிக நேரம் நீடிக்காமல், சீக்கிரம் காலியாவதால், பல பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம். மிக முக்கிய நேரத்தில் பேட்டரி காலியாவது பெரும் சிக்கல்களை ஏற்படுத்தும்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: Instagram caused battery drain on Android phones, confirms Google
ஸ்மார்ட்போன்களில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்றுதான் இன்ஸ்டாகிராம். உலகளவில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட மெட்டாவுக்குச் சொந்தமான இந்த சமூக ஊடகத் தளம், படங்கள், வீடியோக்களைப் பகிர பயன்படுகிறது. கடந்த சில வாரங்களாக, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்கள் இன்ஸ்டாகிராம் பயன்பாடு காரணமாக பேட்டரி சீக்கிரம் காலியாவதாக புகார் கூறி வருகின்றனர். இதன் பின்னணியில் இன்ஸ்டா செயலில் இல்லாதபோதும் பேட்டரியை பயன்படுத்துகிறது என்பது தெரியவந்துள்ளது. இந்தப் பிரச்னை குறித்து மெட்டா எதுவும் கூறவில்லை என்றாலும், சிக்கலைச் சரிசெய்ய ஆப்பை அப்டேட் செய்யுமாறு Google ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
மே 28 புதன்கிழமை அன்று ஆண்ட்ராய்டு சாதனங்களில் பேட்டரி குறைபாட்டை சரிசெய்ய இன்ஸ்டாகிராம் அப்டேட்-ஐ வெளியிடுவதாக கூகிள் தெரிவித்தது. பேட்டரி சீக்கிரம் காலியாகாமல் இருக்க, Google Play Store-க்குச் சென்று இன்ஸ்டாகிராம் பில்ட் 382.0.0.49.84 ஐ நிறுவவும் என்றும் பயனர்களுக்கு அறிவுறுத்துகிறது. இருப்பினும், இன்ஸ்டாகிராம் ஏன் திடீரென பேட்டரி பிரச்னை ஏற்படுத்துகிறது என்று கூகுளோ அல்லது இன்ஸ்டாகிராமோ தெளிவுபடுத்தவில்லை.
பேட்டரி குறைபாட்டை சரிசெய்ய, பழைய அப்டேட்டில் சில பயனர்கள், தங்கள் ஸ்மார்ட்போன்கள் சூடாகியதாகக் கூறினர். தற்காலிகமாக இன்ஸ்டாகிராம் லைட்டிற்கு மாறியதாகவும், இன்ஸ்டாகிராம் பயன்பாட்டால்தான் பிரச்னை ஏற்பட்டது என்பதையும் பயனர்கள் உறுதிப்படுத்தினர்.
பேட்டரி குறைபாடு பிரச்னையால் எந்தெந்த ஸ்மார்ட்ஃபோன்கள் அல்லது ஆண்ட்ராய்டு பாதிக்கப்பட்டன என்பதை Google குறிப்பிடவில்லை என்றாலும், மே மாத அப்டேட்டைப் பெற்ற அனைத்து Pixel சாதனங்களும் இந்தப் பிரசனையால் பாதிக்கப்பட்டன என்று கூறியது. மேலும், மற்ற உற்பத்தியாளர்களின் Android ஃபோன்கள் இன்ஸ்டாகிராம் பேட்டரி குறைபாடு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதா? அல்லது வேறு ஏதேனும் செயலியால் பேட்டரி பிரச்னையா? என்பதும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.