இன்ஸ்டாகிராம் அலுவலகத்தில் என்ன நடக்கிறது?

அதீத அதிகார மையத்தை நோக்கி நகரும் மார்க் ஸூக்கர்பெர்க்... சுதந்திரமாக செயல்பட முடியாமல் தவிக்கும் இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம் நிறுவர்கள் கெவின் சிஸ்ட்ரோம் மற்றும் மைக் க்ரியேகர் முகநூல் குழுமத்தில் இருந்து வெளியேறுகிறார்கள் . 2012ம் ஆண்டு 1 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கொடுத்து, இன்ஸ்டாகிராமினை விலைக்கு வாங்கினார் பேஸ்புக் நிறுவர் மார்க் ஸூக்கர்பெர்க்.

வெறும் 30 மில்லியன் பயனளார்களை கொண்டிருந்த இன்ஸ்டாகிராமினை எதற்காக அவ்வளவு விலை கொடுத்து வாங்க வேண்டும் என்ற எண்ணமும் கேள்வியும் அனைவர் மத்தியிலும் எழுந்தது.

இன்ஸ்டாகிராம் நிறுவர்கள் கெவின் சிஸ்ட்ரோம் மற்றும் மைக் க்ரியேகர் விலகல்

இன்ஸ்டாகிராமினை வாங்கி 6 ஆண்டுகள் ஆகின்ற நிலையில் அதீத அதிகாரப் போக்கினை கையில் எடுத்திருக்கிறார் மார்க் ஸூக்கர்பெர்க். இந்த வருடத்தின் தொடக்கத்தில் முகநூல் நிறுவனம் இன்ஸ்டாகிராமினை விலைக்கு வாங்கவில்லை என்றால் 1 பில்லியன் பயனாளர்களை எட்டியிருக்கும் என்ற கருத்திற்கு மறுப்பு தெரிவித்தார் மார்க்.

ஆனால் ஒரு மைல் தொலைவில் இருக்கும் இன்ஸ்டாகிராம் தலைமை அலுவலகத்தில், இன்ஸ்டாகிராம் நிறுவர்கள் கெவின் சிஸ்ட்ரோம் மற்றும் மைக் க்ரியேகர் இந்த கருத்திற்கு வேறொரு பதிலை வைத்திருந்தார்கள்.

இன்ஸ்டாகிராம் நிறுவர்கள் கெவின் சிஸ்ட்ரோம் மற்றும் மைக் க்ரியேகர், இன்ஸ்டாகிராம்

அதிகார நகர்வுகளுக்குள் சிக்கித் தவிக்கும் இன்ஸ்டாகிராம்

இதில் எவர் கூறும் கருத்து உண்மையென்று நமக்குத் தெரியாது. ஆனால் திங்கள் (24/09/2018) மாலை இன்ஸ்டாகிராம் நிறுவர்கள் கெவின் சிஸ்ட்ரோம் மற்றும் மைக் க்ரியேகர் இருவரும் இன்ஸ்டாகிராம் நிறுவனத்தில் இருந்து வெளியேறுவதாக அறிக்கை வெளியிட்டனர்.

பேஸ்புக் நிறுவனம் இன்ஸ்டாகிராமை வாங்கியிருந்தாலும், முழுச் சுதந்திரத்துடன் தான் முன்பு இயங்கி வந்தது. ஆனால் தற்போது நிலைமை முற்றிலும் மாற்றமடைந்திருக்கிறது. அவர்களின் சொந்த உருவாக்கத்தில் அவர்களுக்கு இருக்கும் உரிமை, தொழில்நுட்ப வல்லுநர்கள் மாற்றம் என தொடர்ந்து அதிக அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டார் மார்க்.

கடந்த இரண்டு வருடங்களில் முகநூல் பெரிய அளவில் சர்ச்சையை சந்தித்து வருகிறது. தனிநபர்களின் ரகசியங்கள் மற்றும் உரிமைகளை தனியார் நிறுவனங்களுக்கு கொடுத்தது தொடர்பாகவும், கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா சர்ச்சை காரணமாகவும் தொடர்ந்து பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. ஆனால் இன்ஸ்டாகிராம் தொடர்ந்து வளர்ச்சி முகம் காட்டி வருவதால், முகநூலின் சர்ச்சைகள் இன்ஸ்டாகிராமினை எந்த வகையிலும் பாதிக்க கூடாது என இருவரும் விரும்புகிறார்கள். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

கருத்துக் கூற மறுத்த பேஸ்புக் நிறுவனம்

மார்க் ஸூக்கர்பெர்க் இன்ஸ்டாகிராமினையும் முகநூல் போல் ஒரே குடையின் கீழ் இயங்கி வரும் நிறுவனமாகவே பார்வையிட்டு வந்தார். இன்றைய நிலவரப்படி இன்ஸ்டாகிராம் சுதந்திரமாக செயல்பட்டிருந்தால் 100 பில்லியன் டாலர்களுக்கு நிகரான மதிப்பினை தற்போது பெற்றிருந்திருக்க இயலும் என்று சில கணக்கெடுப்புகள் கூறுகின்றன.

நிறுவனத்தில் இருந்து வெளியேறுகிறோம் என்று சொன்ன கெவின் சிஸ்ட்ரோம் மற்றும் மைக் க்ரியேகர் எப்போது வெளியேறுகிறோம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இது பற்றி பேஸ்புக் நிர்வாகம் எந்த ஒரு கருத்தினையும் அளிக்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close