New Update
00:00
/ 00:00
உலகம் முழுவதும் நேற்று இரவு திடீரென மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், திரெட்ஸ் சமூக வலைதள சேவைகள் முடங்கின. இந்தியாவிலும் சேவைகளை பயன்படுத்த முடியாமல் பயனர்கள் தவித்தனர். சேவை முடக்கம் குறித்து பயனர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர். இதையடுத்து சேவை முடக்கத்தை மெட்டா உறுதி செய்தது.
மெட்டாவின் செயலிகளில் உள்நுழைய முயற்சித்தால் நேரம் காலாவதி ஆனதாக கூறி தானாக வெளியேறுவதாக பயனர்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த மெட்டா செய்தி தொடர்பாளர் ஆண்டி ஸ்டோன், தொழில்நுட்ப கோளாறு காரணமாக பலருக்கு சேவை முடக்கம் ஏற்பட்டுள்ளது. முடிந்த வரை பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பிரச்சனை சரி செய்யப்பட்டுள்ளது. சிரமத்திற்கு மன்னிக்கவும் எனப் பதிவிட்டுள்ளளார்.
இதையடுத்து சிறிது நேரத்தில் பிரச்சனை சரிசெய்யப்பட்டு சேவை வழக்கம் போல் தொடங்கியது. இந்திய நேரப்படி செவ்வாய்க் கிழமை (மார்ச் 5), இரவு 9 மணியளவில் பயனர்கள் இந்த சிக்கலை எதிர்கொண்டனர். 90 நிமிடங்கள் முடங்கிய சேவை பின் பிரச்சனை சரி செய்யப்பட்டு சீரானது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.