மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் தனது ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் செயலிகளில் பல புதிய அம்சங்களைச் சேர்த்து வருகிறது. இப்போது, போட்டோ மற்றும் வீடியோவில் இருந்து ஸ்டிக்கர்களை உருவாக்க ஏ.ஐ மூலம் உருவாக்கும் அம்சம் உள்பட பல புதிய அம்சங்களை வெளியிட்டுள்ளது.
கஸ்டம் ஏ.ஐ ஸ்டிக்கர்ஸ் உருவாக்க 'கிரியேட்' பட்டன் கிளிக் செய்து படங்கள், வீடியோ Add செய்து உருவாக்கலாம். நமக்கு ஏற்றார் போல் ஸ்டிக்கர் சைஸ் கிரியேட் செய்யலாம். இதை செய்த பின் ‘Use Sticker’ பட்டன் கொடுத்து உங்கள் ஸ்டோரி அல்லது ரில்ஸில் சேர்க்கலாம். இந்த புதிய ஏ.ஐ ஸ்டிக்கர் தற்போது உள்ள ஏ.ஐ ஸ்டிக்கர் ஆப்ஷனில் இருந்து மாறுப்பட்டதாக இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய ஸ்டிக்கர் ஜெனரேட்டரைத் தவிர, இன்ஸ்டாகிராம் ரீல்களுக்கான புதிய ‘அன்டூ’ மற்றும் ‘ரெடோ’ பட்டன்களையும் சோதனை செய்து வருகிறது. இந்த புதிய வசதிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு இன்ஸ்டாகிராம் பயனர்களை கவரும் வகையில் 25 புதிய போட்டோ பில்டர்ஸ் ஆப்ஷகளை அறிமுகம் செய்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“