இன்ஸ்டாகிராமில் புத்தம் புதிய அப்டேட்… இனி இதையும் கஸ்டமைஸ் செய்துகொள்ளலாம்!

Instagram now lets you customise text colour for link stickers Tamil News இது முந்தைய ஸ்வைப்-அப் செயலை விட எளிதாக்குகிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் அனைத்து இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கும் இந்த அம்சம் கிடைத்தது.

Instagram now lets you customise text colour for link stickers Tamil News
Instagram now lets you customise text colour for link stickers Tamil News

Instagram now lets you customise text colour for link stickers Tamil News : இன்ஸ்டாகிராம் சமீபத்தில் அதன் லிங்க் ஸ்டிக்கர் அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இது பயனர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளுக்கு இணைப்புகளைச் சேர்க்க அனுமதிக்கிறது. இருப்பினும், இந்த அம்சம் எவ்வளவு பயனுள்ளதாக இருந்தாலும், உரையில் தனிப்பயனாக்கும் இல்லை. இது பெரும்பாலும் ஸ்டோரிகளில் உள்ள பிற கூறுகளிலிருந்து இணைப்புகளைத் தனித்து நிற்கச் செய்தது. அங்கு டெக்ஸ்ட், படங்கள் மற்றும் பின்னணியைப் பயனர் விரும்பியபடி தனிப்பயனாக்க முடியும்.

இருப்பினும், லிங்க் ஸ்டிக்கர் அம்சத்திற்குத் தனிப்பயன் டெக்ஸ்ட் மற்றும் வண்ண விருப்பங்களுக்கான ஆதரவைச் சேர்ப்பதன் மூலம் இன்ஸ்டாகிராம் இப்போது இதை சரிசெய்துள்ளது. இந்த அம்சம், பெயர் குறிப்பிடுவது போல, பயனர்கள் தங்கள் லிங்க் ஸ்டிக்கர் URL-ல் உள்ள உரையைத் தனிப்பயனாக்க அனுமதிக்கிறது.

Verified பயனர்கள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான பின்தொடர்பவர்களைக் கொண்ட கணக்குகளுக்கு முன்பு இந்த அம்சம் இருந்தபோதிலும், இது இப்போது அனைவருக்கும் வெளியிடப்படுகிறது. இன்ஸ்டாகிராம் ஒரு ட்வீட்டில் இதனை அறிவித்தது.

இன்ஸ்டாகிராம் லிங்க் ஸ்டிக்கர்கள்: அது என்ன, யாருக்காக?

இன்ஸ்டாகிராம் லிங்க் ஸ்டிக்கர்கள் பிரபலமான “ஸ்வைப்-அப்” ஸ்டோரி அம்சத்தின் அடுத்த கட்டம். இது தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களையும் பக்கங்களையும் தங்கள் ஸ்டோரிகளில் இணைப்புகளைச் சேர்க்க அனுமதிக்கிறது. பார்வையாளர்கள் ஸ்டோரியை ஸ்வைப் செய்வதன் மூலம் திறக்கலாம்.

இப்போது, பயனர்கள் தங்கள் ஸ்டோரிகளில் சாதாரண ஸ்டிக்கர்களைப் போலவே இணைப்பு ஸ்டிக்கர்களைச் சேர்க்கலாம். பயனர்கள் தங்களுக்கு விருப்பமான URL-ஐ ஸ்டிக்கரின் உள்ளே சேர்க்கலாம். இணைப்பைப் பின்தொடரப் பார்வையாளர்கள் ஸ்டோரியை கிளிக் செய்ய இது அனுமதிக்கிறது. இது முந்தைய ஸ்வைப்-அப் செயலை விட எளிதாக்குகிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் அனைத்து இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கும் இந்த அம்சம் கிடைத்தது.

இன்ஸ்டாகிராம் : உங்கள் ஸ்டோரிகளுக்கு இணைப்புகளை எவ்வாறு சேர்ப்பது?

ஸ்டெப் 1: முதலில், இன்ஸ்டாகிராமில் உங்கள் ஸ்டோரியில் உள்ளடக்கத்தைப் பதிவேற்றவும்.

ஸ்டெப் 2: மேல் வழிசெலுத்தல் பட்டியில் இருந்து ஸ்டிக்கர் கருவியைத் தேர்ந்தெடுக்கவும்.

ஸ்டெப் 3: நீங்கள் விரும்பிய இணைப்பைச் சேர்க்க இப்போது “இணைப்பு” ஸ்டிக்கரை க்ளிக் செய்யுங்கள். அதன் பிறகு, நீங்கள் “முடிந்தது” பட்டனை மீண்டும் க்ளிக் செய்ய வேண்டும்.

ஸ்டெப் 4: உங்கள் ஸ்டோரியில் எங்கு வேண்டுமானாலும் இந்த ஸ்டிக்கரை வைக்கலாம் மற்றும் தனிப்பயனாக்க ஸ்டிக்கரை க்ளிக் செய்யவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Instagram now lets you customise text colour for link stickers tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com