இன்ஸ்டாகிராம் பிரபலமான சமூக வலைதளமாகும். இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் தளமாக இன்ஸ்டாகிராம் உள்ளது. இன்ஸ்டா ரீல்ஸ் அம்சம் நல்ல வரவேற்பு பெற்றது. பயனர்களை கவரும் வகையில் நிறுவனம் புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. பயனர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து வருகிறது. அந்தவகையில் தற்போது இன்ஸ்டாகிராம் டி.பி புகைப்படத்தை (DP) Enlarge செய்து பெரிதுபடுத்தி பார்க்கும் வகையில் புது அப்டேட் வெளியாகி உள்ளது.
ட்விட்டர், வாட்ஸ்அப் செயலியில் நமது டி.பி, மற்றவர்களின் டி.பி-யை Enlarge செய்து பார்க்க முடியும். அதாவது full size picture பார்க்க முடியும். ஆனால் இன்ஸ்டாவில் அவ்வாறு செய்ய முடியாது. மூன்றாம் தரப்பு செயலி பயன்படுத்தி மட்டுமே பார்க்க முடியும்.
இந்தநிலையில் கடந்த வாரம் வெளியான புது அப்டேட்டில் DP (display pictures) பெரிதுபடுத்தி பார்க்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. டி.பியின் மீது கிளிக் செய்து புகைப்படத்தை பார்க்கலாம். வட்ட வடிவில் (circular pop-up) Enlarge டி.பி காண்பிக்கப்படும். இது பயனர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்து வந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/