இன்ஸ்டாகிராமில் இனி வெப் பதிப்பிலிருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடலாம்..

Instagram now lets you post photos and videos from web version Tamil News இதற்காக, ஒரு நபரை ஈடுபடுத்த டேக்கிங் திரையிலிருந்து இன்னொருவரை இன்வைட் செய்யவேண்டும்.

Instagram now lets you post photos and videos from web version Tamil News
Instagram now lets you post photos and videos from web version Tamil News

Instagram now lets you post photos and videos from web version Tamil News : வெப் பதிப்பைப் பயன்படுத்தி புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை வெளியிடும் திறனை இறுதியாக இன்ஸ்டாகிராம் சேர்த்துள்ளது. Engadget-ல் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த அம்சம் இப்போது உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. இந்த அம்சம் தங்கள் கணினியில் புகைப்படங்களைத் திருத்தி, அதிக ரெசல்யூஷனில் படங்களைப் பதிவேற்றுவோருக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

உங்கள் படங்களை உங்கள் ஸ்மார்ட்போனுக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை. அவற்றை உங்கள் கணினியிலிருந்து நேரடியாக இன்ஸ்டாகிராமில் எளிதாகப் பதிவேற்றலாம். இன்ஸ்டாகிராம், முன்பு பயனர்கள் வெப் பதிப்பில் ஃபீடுகளை ஆராய அனுமதித்தது. தவிர, உங்கள் அனைத்து இன்ஸ்டாகிராம் செய்திகளையும் உங்கள் கணினியிலிருந்தும் அணுகலாம்.

இந்த சமூக நெட்வொர்க் பல வருடங்களாக தொலைபேசி செயலியாக மட்டுமே இருந்தது. மேலும், பேஸ்புக்கிற்கு சொந்தமான நிறுவனம் இப்போது பயனர்களுக்கு இந்த செயலியில் இணைந்திருக்க இன்னும் பல காரணங்களை வழங்குகிறது. நீங்கள் பிரவுசரில் இன்ஸ்டாகிராமை தேடலாம், உள்நுழைந்து “+” ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் உள்ளடக்கத்தைப் பதிவேற்றத் தொடங்கலாம்.

மேற்கோள் காட்டப்பட்ட ஆதாரம், மொபைல் பயனர்களுக்காகவும் நிறுவனம் சில அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கோலாப்ஸ் சோதனை அம்சம், பதிவுகளுக்கு இரண்டு நபர்களை இணை ஆசிரியராக அனுமதிக்கிறது. இது ரீல்ஸ்களுக்கும் பொருந்தும். இதற்காக, ஒரு நபரை ஈடுபடுத்த டேக்கிங் திரையிலிருந்து இன்னொருவரை இன்வைட் செய்யவேண்டும்.

இந்த வழியில், இரு பயனர்களுக்கும் பின்தொடர்பவர்கள் இடுகையைப் பார்க்க முடியும். இந்த அம்சம் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். இந்த அம்சத்தைப் பயன்படுத்துபவர்கள், இன்ஸ்டாகிராம் படைப்பாளிகள் அல்லது ஆசிரியர்களுக்கான அதே பார்வைகள், விருப்பங்கள் மற்றும் கருத்துகளைக் காண்பிப்பதையும் பார்ப்பார்கள்.

“புதிய இடுகை பட்டனிலிருந்து லாப நோக்கற்ற நிதி திரட்டல்களைத் தொடங்க” இன்ஸ்டாகிராம் உங்களை அனுமதிக்கும் என்றும் Engadget பரிந்துரைத்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Instagram now lets you post photos and videos from web version tamil news

Next Story
ஜிஎஸ்டி எதிரொலி: ஐ-போன் 7, 6எஸ் விலை குறைப்பு; வாங்கலாமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com