New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/11/Instagram-2.jpg)
Instagram now need you to take video selfies for identity verification Tamil News
Instagram now need you to take video selfies for identity verification Tamil News
Instagram now need you to take video selfies for identity verification Tamil News : சமூக ஊடக ஆலோசகர் மாட் நவரா பகிர்ந்துள்ள ஸ்கிரீன் ஷாட்களின்படி, இன்ஸ்டாகிராம் இப்போது அடையாள சரிபார்ப்புக்காக வீடியோ செல்ஃபிகளைக் கேட்கத் தொடங்கியுள்ளது. சமூக ஊடக தளத்தில் போலி சுயவிவரங்கள் மற்றும் ஸ்பேம் கணக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை இருக்கும்.
குறிப்பிட்ட பயனர் உண்மையான நபரா இல்லையா என்பதைப் புரிந்துகொள்ள புதிய அடையாளச் சரிபார்ப்பு செயல்முறை இன்ஸ்டாகிராமுக்கு உதவும் என்பதை அந்த ஸ்கிரீன்ஷாட்கள் காட்டுகின்றன. உங்கள் தலையை வெவ்வேறு திசைகளில் திரும்பியபடி ஒரு சிறிய வீடியோவை இன்ஸ்டாகிராம் கேட்கும். இந்த வீடியோ செல்ஃபிகள் பின்தளத்தில் சேமிக்கப்படாது மற்றும் 30 நாட்களில் நீக்கப்படும் என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது.
“உங்கள் தலையை வெவ்வேறு திசைகளில் திருப்பும் ஒரு சிறிய வீடியோ எங்களுக்குத் தேவை. நீங்கள் உண்மையான நபர் என்பதை உறுதிப்படுத்தவும், உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும் இது எங்களுக்கு உதவுகிறது" என்று இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது. இது தவிர இன்ஸ்டாகிராமின்படி, நீங்கள் பதிவேற்றும் வீடியோ செல்ஃபிகள் ஒருபோதும் பிளாட்ஃபார்மில் காட்டப்படாது. பயோமெட்ரிக் தரவைச் சேகரிக்க மாட்டோம் அல்லது நிறுவனத்தின் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த மாட்டோம் என்று நிறுவனம் உறுதியளிக்கிறது என்பதையும் திரைக்காட்சிகள் காட்டுகின்றன.
இன்ஸ்டாகிராம் இந்த வீடியோ செல்ஃபி சரிபார்ப்பு விஷயத்தை முயல்வது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. சமூக ஊடக நிறுவனமான இது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இதேபோன்ற பாதுகாப்பு சோதனை அம்சத்தை முதன்முதலில் வெளியிட்டது. ஆனால், நிறுவனம் சில தொழில்நுட்ப சிக்கல்களைக் கண்டதால் இது குறுகிய காலத்திற்கு மட்டுமே கிடைத்தது. XDA டெவலப்பர்களின் அறிக்கையின்படி, இந்த அம்சம் இப்போது நிறையப் பயனர்களுக்குக் கிடைப்பதால் அந்த சிக்கல் தீர்க்கப்பட்டதாகத் தெரிகிறது.
மேற்கோள் காட்டப்பட்ட ஆதாரம், இன்ஸ்டாகிராம் தற்போதுள்ள அனைத்து கணக்குகளுக்கும் வீடியோ செல்ஃபி சரிபார்ப்பைக் கேட்கவில்லை என்றும் புதிய கணக்குகள் ஒரு சிறிய செல்ஃபி வீடியோ கிளிப் மூலம் தங்கள் அடையாளத்தை சரிபார்க்க அறிவுறுத்தலைப் பெறுவதாகவும் கூறப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.