இன்ஸ்டாகிராம் உலக முழுவதும் பயன்படுத்தப்படும் மிக பிரபலமான சமூக வலைதளம் ஆகும். குறிப்பாக இளைஞர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் இதில் உள்ள சில ப்ரைவசி ஆப்ஷன்கள் பற்றி பார்ப்போம்.
1. ப்ரைவேட் அக்கவுண்ட் ஆக மாற்றவும்
இன்ஸ்டாகிராம் செட்டிங்க்ஸ் சென்று உங்கள் கணக்கை ப்ரைவேட் அக்கவுண்ட் ஆக மாற்றவும். இப்படி செய்யும் போது நீங்கள் ஃபாலோ செய்வர்கள் மட்டுமே உங்கள் ஸ்டேட்டஸ், போஸ்ட் பார்க்க முடியும். செட்டிங்க்ஸ் பக்கத்தில் அக்கவுண்ட் ப்ரைவசி பக்கம் சென்று ப்ரைவேட் அக்கவுண்ட் என்ற ஆப்ஷனை எனெபிள் செய்யவும்.
2. பேஸ்புக் உடன் இணைப்பை டிஸ்கனென்ட் செய்யவும்
நீங்கள் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்யும் புகைப்படங்கள் அனைத்தும் பேஸ்புக்கிலும் காட்டப்படும். இது சில நேரங்களில் பிரச்சனையாக இருக்கலாம். ஏனென்றால் இரண்டு தளத்திலும் வேறு வேறு நபர்கள் ஃபாலோ செய்யலாம்.
பேஸ்புக் உடன் இணைப்பை டிஸ்கனென்ட் செய்ய, செட்டிங்க்ஸ் சென்று Accounts Centre - Accounts- அதன் பின் பேஸ்புக் உடன் இணைப்பு என்ற ஆப்ஷனை டிஸ்கனென்ட் செய்யவும்.
3. 'Close friends' list
'Close friends' லிஸ்ட் என்பது உங்கள் ஃபாலோவர்களில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் போஸ்ட், ஸ்டோரிஸ் காண்பிப்பது ஆகும். இதை செய்ய ஆப் செட்டிங்க்ஸ் சென்று ஸ்கார்ல் டவுன் செய்து 'Close friends' என்ற ஆப்ஷனை கொடுக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“