Instagram Reels vs TikTok: லாக்டவுன் காலத்தில் சமூக வலைதள பயன்பாட்டில் பெரிய மாற்றங்கள் உருவாகியுள்ளது. மக்கள் பயன்படுத்தும் அனைத்து ப்ளாட்ஃபார்ம்களிலும் சரியான போட்டிகளை உருவாக்க முகநூல் தொடர்ந்து முயன்று வருகிறது. ஜூம் மீட்டிற்கு ஈடுகட்டும் வகையில் மெசெஞ்சர் ரூம்ஸ் (Messenger Rooms) என்ற வசதியை உருவாக்கியது. தற்போது டிக்டாக்கிற்கு போட்டியாக ரீல்ஸ் என்ற வசதியை இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் புதன்கிழமை மாலை வெளியிடப்பட்ட இந்த புதிய வசதி மூலம் 15 நொடிகள் வரை வீடியோவை உருவாக்க இயலும். சோதனை முயற்சியில் இருக்கும் இந்த செயலி நல்ல வரவேற்பை பெரும் பட்சத்தில் அனைத்து பயனாளர்களுக்கும் உதவும் வகையில் உருவாக்கப்படும். அதிகாரப்பூர்வமாக எப்போது வெளியாகிறது என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. இந்த வசதியை பெற நீங்கள் உங்கள் மொபைல் செயலியை அப்டேட் செய்ய வேண்டும். தற்போது மொபைல் வெர்சனில் மட்டுமே இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டிக்டாக் மற்றும் இதர 58 சீன செயலிகளை இந்திய அரசு தடை செய்திருக்கும் இந்த சமயத்தில், டிக்டாக்கிற்கு மாற்றாக முகநூல் வசதியை அறிமுகம் செய்துள்ளது. பயன்படுத்த மிகவும் எளிமையாக இருந்த காரணத்தினால் இந்திய மக்கள் மத்தியில் இந்த செயலி நல்ல வரவேற்பினைப் பெற்றிருந்தது.
ரீல்ஸ்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இன்ஸ்டாகிராமில் தற்போதைய வசதி பயன்படுத்த கொஞ்சம் கடினமாகவே உள்ளது. ஆரம்பத்தில் டிக்டாக் போன்று ரீல்ஸ் இருக்கும் என எதிர்பார்த்திருந்தனர் பயனாளிகள். ஆனால் அதன் செயல் வடிவம் மாறுபட்டதாக இருக்கிறது. டிக்டாக் ஒரு தனி செயலியாக இருக்க, இன்ஸ்டாகிராமில் ஒரு வசதியாகவே அமைந்துள்ளது. ஐஜி டிவி போலவே இதுவும் உங்கள் ப்ரொபைலில் பார்வைக்கு வைக்கப்படும்.
உங்களின் ரில் வீடியோவை உருவாக்க ரீல் ஆப்ஷனை தேர்வு செய்து உங்களின் வீடியோவை அப்லோட் செய்யலாம். டிக்டாக் போன்று இதிலும் வேகம் சப்தம் மற்றும் இதர வசதிகள் உள்ளது. உங்களின் சொந்த குரலையும் இதில் பதிவேற்றம் செய்யலாம் ஆனால் பொதுவெளியில் பயன்பாட்டிற்கு வரும்போது இதனை மற்றவர்களும் பயன்படுத்த இயலும்.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
ரீல்ஸ் வீடியோ 15 நொடிகளுக்கு மட்டுமே. பெரிய வீடியோவாக பதிவு செய்தாலும் அதனை ரீல்ஸ் 15 நொடிகளுக்கு ஏற்றவாறு க்ராப் செய்து கொள்ளும். நீண்ட வீடியோ வேண்டுமென்றால் ஐ.ஜி.டி.வி இருக்கிறதே.
டிக்டாக்கை போன்றே ரீல்ஸிலும் எஃபெக்ட்ஸ், ஸ்பீட், மற்றும் ஆடியோ ஆகியவற்றை வீடியோ அப்லோட் செய்வதற்கு முன்பே இணைத்துக் கொள்ள இயலும். ரெக்கார்ட் செய்த வீடியோவை டெலிட் செய்யவும், மறுபடியும் ரெக்கார்ட் செய்யவும் ஆப்சனை கொண்டுள்ளாது ரீல்ஸ். ஆடியோவை மீண்டும் பயன்படுத்த, ஸ்கிரீனுக்கு கீழே உள்ள ஆடியோ பட்டனை பிரஸ் செய்தால் ”யூஸ் ஆடியோ” என்ற ஆப்சன் வரும். எஃபெக்ட் சேர்க்கவும் இதே போன்று ”யூஸ் எஃபெக்ட்-ஐ” பயன்படுத்திக் கொள்ளலாம்.
டிக்டாக்கை போன்று இன்ஸ்டாவின் ரீல்ஸில் தற்போது ட்ரெண்டிங்கில் என்ன இருக்கிறது என்பதை பார்க்க இயலாது. அதே போன்று ரீல்ஸ் மூலம் பணம் சம்பாதிக்கவும் இயலாது. இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலை நகரங்களில் இருக்கும் அதிக அளவு பயனிகளை கவர்ந்தது டிக்டாக். இந்தியாவில் 200 மில்லியன் மக்கள் இந்த செயலியை பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook
Web Title:Instagram reels vs tiktok which video creating platform is better