சமூக வலைத்தளங்களில் பலவிதமான மோசடிகள் சமீபத்தில் நடந்து வருகிறது. இதில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் மக்களில் தனது பக்கம் முடக்கப்படுவதாகவும், தனது பெயரில் போலி பக்கம் உருவாக்கப்படுவதாகவும் புகார்கள் எழுகிறது.

இந்த நிலையில் தற்போது, திரைப்பட இயக்குனரும், நடிகருமான ரவிமரியா சைபர் கிரைம் போலீசில், தனது பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கி, தனது நண்பர்களிடம் பணம் கேட்டு மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளார்.
புகார் அளித்த பிறகு ‘இது போன்ற குறுஞ்செய்திகளுக்கு பதிலளித்து இரையாக வேண்டாம்’ என்று நடிகர் சமூக ஊடகங்களில் தனது நண்பர்களிடம் கேட்டுக்கொண்டார்.
சென்னை தெற்கு மண்டலத்தைச் சேர்ந்த சைபர் கிரைம் காவல்துறையை தொடர்பு கொண்டு கேட்டபோது, நடிகரின் நண்பர் ஒருவர், ரவிமரியாதான் என்று நம்பி, 7,000 ரூபாய் அனுப்பியதாகக் கூறினார்.
பின்னர் சந்தேகத்தின் பேரில் அந்த நடிகரை சோதித்தபோது அவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதுபோன்ற சம்பவங்களை மேலும் தவிர்க்க, நடிகர் ஒரு வீடியோ கிளிப்பை வெளியிடுவதுடன், காவல்துறையின் உதவியை நாடியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil