பிராண்டட் பொருட்கள் வாங்க வேண்டுமா ? இன்ஸ்டாகிராமில் ஷாப்பிங் பண்ணுங்க!

ஆனால் தற்போது அமெரிக்காவில் மட்டுமே இந்த வசதி உள்ளது. மிக விரைவில் இந்தியாவிலும் இந்த வசதிகள் வர உள்ளன.

Instagram new Layout option
Instagram new Layout option

Instagram shopping : இன்ஸ்டகிராம் செயலி மூலமாக உங்களுக்கு விருப்பமான பொருட்களை உங்களால் தற்போது வாங்க இயலும். அதற்கான புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.  20ற்கும் மேற்பட்ட பிரபலமான நிறுவனங்களின் ப்ரோடக்டுகளை நீங்கள் தற்போது வாங்கிட வழிவகை செய்கிறது இன்ஸ்டாகிராம்.

Instagram shopping : பிராண்டட் பொருட்கள் வாங்க வேண்டுமா ?

ஜாரா, அடிடாஸ், டியோர், மேக் காஸ்மெடிக்ஸ், எச் அண்ட் எம், மைக்கேல் கோர்ஸ், ப்ரதா, யுனிகொலா, வார்பி, பார்கர், ஆஸ்கர் டி லா ரெண்டா என வரிசையாக அணி வகுத்து நிற்கும் பொருட்களில் உங்களுக்கு தேவையானதை முதலில் தேர்வு செய்ய வேண்டும்.

பின்பு நீல நிறத்தில் இருக்கும் செக்-அவுட் ஆன் இன்ஸ்டாகிராம் என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். அதன்பின்பு உங்களின் மின்னஞ்சல் முகவரி, டெலிவரி முகவரி என இரண்டையும் அதில் நிரப்ப வேண்டும்.

அதன் பின்பு பணப்பரிவர்த்தனை நடைபெறும். அதில் இன்ஸ்டாகிராம் செல்லிங் ஃபீஸ் எனும் விற்பனைக் கட்டணத்தை பயனாளிகளிடம் இருந்து பெற்றுக் கொள்ளும். ஆனால் தற்போது அமெரிக்காவில் மட்டுமே இந்த வசதி உள்ளது. மிக விரைவில் இந்தியாவிலும் இந்த வசதிகள் வர உள்ளன.

மேலும் படிக்க : இத்தனை வசதிகள் கொண்ட ஐபேட்-காக தான் இத்தனை நாள் வெய்ட்டிங்…

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Instagram shopping will let you shop from hm nike zara and more

Next Story
IRCTC Train Ticket Booking: இனி கூகுள் பே மூலம் ரயில் டிக்கெட் புக்கிங்!IRCTC, IRCTC ticket booking
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com