மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலி நாளுக்கு நாள் பிரபலமடைந்து வருகிறது. போட்டோஸ் மட்டுமே பார்க்க உபயோகிக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் செயலியில், டிக்டாக் தடையை தொடர்ந்து அறிமுகமான ரீல்ஸ் அம்சம் எதிர்பாராத அளவில் ஹிட் அடித்தது. தினமும் கிடைக்கும் நேரங்களிலாலும் Insta reels பார்க்கும் அளவிற்கு மக்கள் மூழ்கி இருந்தனர்.
ஆனால், இதனை வணிக ரீதியாக மாற்றப்போவதாகவும், அதற்கான சோதனை ஓட்டம் அமெரிக்காவில் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பிடித்தமான பிரபலங்களின் பிரத்யேக வீடியோக்களை காண சந்தா கட்ட வேண்டும் என்ற அறிவிப்பு பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.
இந்நிலையில், இன்ஸ்டா ரீல்ஸ் மாத சந்தா ஆப்ஷன் இந்தியாவிலும் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய வசதி, ரீல்ஸ் கிரியேட்டர்களுக்கு மாத சந்தா செலுத்திய பாலோயர்களுக்கு பிரத்யேக வீடியோக்களை காண அனுமதிக்கும். மேலும், பிடித்தமான கிரியேட்டர்களுக்கு கட்டணம் செலுத்திய பாலோயர்களின் Username-க்கு பக்கத்தில் பர்பிள் நிற பேட்ச் இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களால் இன்ஸ்டாகிராமின் பிரத்யேக லைவ் வீடியோஸ், ஸ்டோரிஸ்களை காண முடியும்.
இந்த சேவை அமெரிக்காவின் உள்ள சில கிரியேட்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போது இந்தியாவிலும் இந்த சேவை தென்பட்டுள்ளது. @salman_memon_7 என்கிற ட்விட்டர் பயனாளர் ஷேர் செய்த ஸ்கீரின்ஷாட்டில், பிடித்தமான கிரியேட்டர்களை சப்ஸ்கிரைப் செய்யும் வசதி இந்திய பயனாளர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்தை காண முடிகிறது.
இன்ஸ்டா பயனாளர்கள், ஆப் ஸ்டோர் அல்லது ப்ளே ஸ்டோரின் ஆப்ஸ் பர்ச்சேஸ்கள் மூலம் பிடித்த கிரியேட்டர்களுக்கு மாத சந்தா செலுத்தலாம். இந்தியாவில் இதன் விலை மாதத்திற்கு ரூ.89, ரூ.440 மற்றும் ரூ.890 என கூறப்படுகிறது. அமெரிக்காவில் இதன் விலை மாதத்திற்கு $0.99 முதல் $99.99 வரை இருக்கும் என கூறப்படுகிறது.
தற்போதைக்கு, இந்திய கிரியேட்டர்களால் தங்களது பாலோயர்களுக்கு பிரத்யேக வீடியோக்களை மாத சந்தா மூலம் வழங்க முடியாது. ஆனால் இந்திய பயனர்களால், அமெரிக்கா கிரியேட்டர்களுக்கு மாத சந்தா செலுத்தி அவர்களது பிரத்யேக வீடியோக்களை காண முடியும்.
இன்ஸ்டாகிராம், ட்விட்டர் ஆகிய இரண்டும் தளங்களும் OnlyFans என்ற சொந்த அம்சத்தை உருவாக்கி வருகின்றன. இது, ஆன்லைன் கிரியேட்டர்கள் தங்கள் ரசிகர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வகையில் பிரத்யேக அம்சங்களை வெளியீடும் இடமாகும். இதற்கு மாத சந்தா போல் கட்டணம் வசூலிக்கப்படும்.
முன்னதாக செப்டம்பர் 2021 இல், ட்விட்டர் சூப்பர் ஃபாலோஸ் என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்த சேவை மூலம், சம்ந்தப்பட்ட நபர் தன்னை பின் தொடர்பவர்களில் தனக்கு யார் சந்தா கட்டணம் செலுத்துகிறார்களோ அவர்களுக்கென்று பிரத்யேக ட்விட்டை பகிரலாம். இம்முறை, அமெரிக்கர்ளுக்கு தற்போது பயன்பாட்டில் உள்ளது. இதற்காக $2.99, $4.99 அல்லது $9.99 என்கிற விருப்பத்தில் மாதாந்திர சந்தாவை செலுத்துகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil