New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/09/New-Project-15.jpg)
Instragram currently allows users to post 3-minute-long Reels.
உலக அளவில் டிக்டாக் மற்றும் யூடியூப்-க்கு போட்டியாக 10 நிமிட அளவிற்கு ரீல்ஸ் செய்யும் வசதியை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்ய உள்ளது.
Instragram currently allows users to post 3-minute-long Reels.
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் 10 நிமிட ரீல்ஸ் அம்சத்தை சோதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்ஸ்டாகிராம் தற்போது அதிகபட்சமாக 3 நிமிட ரீல்ஸிற்கு அனுமதி அளிக்கிறது. இதை 10 நிமிடங்களாக அதிகரிக்க முடிவு செய்தால் கல்வி தொடர்பான வீடியோ, சமையல் குறிப்புகள் பதிவிடுபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
X தளத்தில் என்ஜினீயர் அலெஸாண்ட்ரோ பலுஸியால் கூறுகையில், :இன்ஸ்டாகிராம் தற்போது இந்த அம்சத்தை வெளிநபர்களுக்கு சோதிக்கவில்லை. Internal-ஆக சோதனை செய்யப்பட்டு வருகிறது" என்று கூறினார்.
#Instagram is working on the ability to create #Reels up to 10 minutes long 👀 pic.twitter.com/jQTUM9fPsM
— Alessandro Paluzzi (@alex193a) August 30, 2023
தற்போது வரை இன்ஸ்டாகிராம் பிளாட்ஃபார்மில் நீண்ட வடிவ வீடியோ உள்ளடக்கத்தைப் பகிர விரும்பும் பயனர்கள் அதை பல பகுதிகளாகப் பிரித்து பகிர வேண்டி உள்ளது. இதனால் பயனர்கள் அடுத்த வீடியோவைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
இப்போது ரீல்ஸ் நிமிடங்களை அதிகரித்தால் கண்டெட்ன்ட் கிரியேட்டர் மற்றும் பயனர்களுக்கு எளிதாக இருக்கும். அதோடு பயனர்கள் அதிக நேரம் இன்ஸ்டாகிராமில் என்கேஜ் ஆக இருப்பர். இன்ஸ்டாகிராமின் இந்த புதிய வசதி உலக அளவில் டிக்டாக் மற்றும் யூடியூப்-க்கு போட்டியாக களமிறக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.