விரைவில் இன்ஸ்டாகிராம் டெஸ்க்டாப்பிலிருந்து புகைப்படங்களை போஸ்ட் செய்யும் அம்சம்!

Instagram testing feature that lets you post photos from desktop Tamil News இன்ஸ்டாகிராம் அதன் சோதனையை விரிவுபடுத்தினால் “மிகவும் மகிழ்ச்சியடைவார்கள்” என்று சமூக ஊடக ஆலோசகரான மாட் நவர்ரா கூறினார்.

Instagram testing feature that lets you post photos from desktop Tamil News
Instagram testing feature that lets you post photos from desktop Tamil News

Instagram testing feature that lets you post photos from desktop Tamil News : பேஸ்புக் இன்க்-ன் இன்ஸ்டாகிராம் ஒரு தசாப்தத்திற்கும் மேலாகப் பயனர்கள் தங்கள் டெஸ்க்டாப்பிலிருந்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் போஸ்ட் செய்ய அனுமதிக்கும் ஒரு அம்சத்தை சோதிக்கிறது.

“பலர் தங்கள் கணினியிலிருந்து இன்ஸ்டாகிராமை அணுகுவதை நாங்கள் அறிவோம்” என்று பேஸ்புக் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டின் பாய் கூறினார். “அந்த அனுபவத்தை மேம்படுத்த, இன்ஸ்டாகிராமில் ஒரு டெஸ்ட் டாப் உலாவியைக் கொண்டு ஒரு ஃபீட் போஸ்ட்டை உருவாக்கும் திறனை நாங்கள் இப்போது சோதிக்கிறோம்.”

2010-ல் நிறுவப்பட்ட இன்ஸ்டாகிராம், அதன் தயாரிப்புகளின் வலை பதிப்பை உருவாக்குவதை நீண்டகாலமாக எதிர்த்தது. ஏனென்றால் மக்கள் தங்கள் தொலைபேசிகளுடன் புகைப்படங்களை எடுக்கும்போது டெஸ்க்டாப் எதற்கு என்பதால்தான். இப்போது, இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்யும் நபர்களில் அதிகமானவர்கள் தொழில் வல்லுநர்கள் அல்லது செல்வாக்கு உள்ளவர்கள்தான். அவர்கள் அதிக எடிட்  செய்யப்பட்ட அல்லது தயாரிக்கப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்குகிறார்கள். அதனை உடனடியாக இல்லாமல் சில மணிநேரம் அல்லது நாட்கள் கழித்துதான் போஸ்ட் செய்கிறார்கள்.

அவர்கள் டெஸ்க்டாப் வழியாக இன்ஸ்டாகிராமில் உள்ளடக்கத்தைப் பதிவேற்ற மூன்றாம் தரப்பு கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். மேலும், இன்ஸ்டாகிராம் அதன் சோதனையை விரிவுபடுத்தினால் “மிகவும் மகிழ்ச்சியடைவார்கள்” என்று சமூக ஊடக ஆலோசகரான மாட் நவர்ரா கூறினார்.

“டெஸ்க்டாப் வழியாக வெளியீட்டைச் சேர்ப்பதற்கான இன்ஸ்டாகிராமின் பிளாட்ஃபார்மில் முன்னேறுவதற்கான மிகப் பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று நான் சந்தேகிக்கிறேன்” என்று நவரா கூறினார். டிக்டாக் மற்றும் யூடியூப் போன்ற போட்டியாளர்களிடமிருந்து உள்ளடக்கப் படைப்பாளர்களை ஈர்க்க இன்ஸ்டாகிராம் கூடுதல் கருவிகளை வடிவமைக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Instagram testing feature that lets you post photos from desktop tamil news

Next Story
ஏர்டெல் வழங்கும் புதுப்பிக்கப்பட்ட ரூ.349 மற்றும் ரூ.299 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்!Airtel revises its Rs 349 Rs 299 prepaid recharge plans Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X