இன்ஸ்டாகிராம் ஸ்டாரிஸ்களுக்கு போட்டோ அல்லது வாய்ஸ் மூலம் பதில் அனுப்பும் வசதியை சோதித்து வருவதாக சாப்ட்வேர் டெவலப்பர் அலெஸாண்ட்ரோ பலுஸ் ட்வீட் செய்துள்ளார்.
இதுதவிர மற்றொரு ட்வீட்டில், பயனர்கள் QR குறியீட்டைப் பயன்படுத்தி போஸ்டை ஷெர் செய்யும் அம்சத்தை உருவாக்கும் பணியலும் இன்ஸ்டாகிராம் ஈடுபட்டுள்ளது.
பலுஸ்ஸி பகிர்ந்த ஸ்கிரீன்ஷாட்கள்படி, இன்ஸ்டாவில் ஸ்டோரிக்கு ரிப்ளை அதே மெசேஜ் டைப் பாக்ஸ் தான் உள்ளது. ஆனால், முதல் பதிவில், மெசேஜ் பாக்ஸில் GIF ஆப்சஷக்கு அருகில் இமெஜ் ரிப்ளை செய்யும் ஐகான் இருப்பதை காண முடிகிறது. அதே போல், மற்றொரு பதிவில் GIF ஆப்சஷக்கு அருகில் வாய்ஸ் ஐகான் உள்ளது. இதை பார்க்கையில், பயனர்கள் போட்டோ அல்லது வாய்ஸில் எப்படி ரிப்ளை செய்ய வேண்டும் என்பதை தெர்ந்தேடுக்கும் வசதி அளிக்கப்படலாம்.
பிப்ரவரி மாதம், இன்ஸ்டாகிராம் நிறுவனம் ஸ்டாரிகளுக்கு ஸ்பீடு ரிப்ளை அனுப்பிட எமோஜி வசதியை அறிமுகப்படுத்தியது. அதுவரை, ஸ்டோரிகளுக்கு நேரடி மெசேஜ் மட்டுமே செய்திட முடியும். வேண்டுமானால் மெசேஜ் டைப் செய்வதற்கு பதிலாக, இன்ஸ்டாவில் உள்ள GIF அல்லது ஸ்டீக்கர்களை அனுப்பலாம்.
இந்த புதிய போட்டோ ரிப்ளை ஆப்ஷன், பயனர்கள் தெரிந்தவர்களின் ஸ்டோரிகளுக்கு ரிப்ளை செய்திட பல கிரியெட்டிவ் ஆப்ஷன்களை அறிமுகப்படுத்த வலியுறுத்தும் என கருதப்படுகிறது. இத்தகைய அப்டேட்ஸ், இன்ஸ்டாகிராம் போட்டோ ஷெரிங் செயில் மட்டுமே என மக்கள் மனதில் இருக்கும் பிம்பத்தை உடைக்க உதவிடும்.
இன்ஸ்டாகிராமின் தலைவரான ஆடம் மொசெரி, ஜூன் 2021 இல் தனது ட்விட்டரில் பகிரப்பட்ட வீடியோவில் நிறுவனத்தின் முன்னுரிமைகள் பற்றிப் பேசினார்.
அதில், கிரியெட்டர்ஸ், வீடியோ, ஷாப்பிங், மெசேஜ் அனுப்புதல் ஆகிய 4 பகுதிகளில் மட்டுமே இன்ஸ்டாகிராம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil