இன்ஸ்டாகிராமில் புத்தம் புதிய 'ஃபேவரைட்ஸ்' அம்சம்.. அப்படி என்ன இதில் ஸ்பெஷல்?

Instagram testing new favourites feature to prioritise posts Tamil News இந்த புதிய ஃபேவரைட்ஸ் அம்சத்தை டெவலப்பர் அலெஸாண்ட்ரோ பலுஸி ட்விட்டர் பக்கத்தில் காட்சிப்படுத்தினார்.

Instagram testing new favourites feature to prioritise posts Tamil News இந்த புதிய ஃபேவரைட்ஸ் அம்சத்தை டெவலப்பர் அலெஸாண்ட்ரோ பலுஸி ட்விட்டர் பக்கத்தில் காட்சிப்படுத்தினார்.

author-image
WebDesk
New Update
Instagram testing new favourites feature to prioritise posts Tamil News

Instagram testing new favourites feature to prioritise posts Tamil News

Instagram testing new favourites feature to prioritise posts Tamil News : இன்ஸ்டாகிராம் ஒரு புதிய அம்சத்தை சோதித்து வருகிறது. இது பயனர்களுக்கு, சில பயனர்களின் போஸ்டுகளை மற்றவர்களுக்கு முன்பு பார்க்க அனுமதிக்கும். இந்த ஃபேவரைட் அம்சம், உங்கள் வட்டத்தில் உள்ள மற்ற இன்ஸ்டாகிராம் கணக்குகளைப் பிடித்தவையாகக் குறிக்க அனுமதிக்கும். மேலும், இது உங்கள் முதன்மை பக்கத்தில் மற்றவர்களை விட அவர்களின் போஸ்டுகளுக்கு முன்னுரிமை அளிக்கும்.

Advertisment

இன்ஸ்டாகிராமின் பழைய ஃபேவரைட் அம்சங்களுடன் இந்த புதிய அம்சத்தை ஒப்பிடுகையில், இது பயனர்கள் தங்கள் போஸ்டுகளை பார்க்க ஒரு வரையறுக்கப்பட்ட பார்வையாளர்களை அமைக்க அனுமதிக்கிறது. உங்கள் புதிய இன்ஸ்டாகிராம் போஸ்டுகளை இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுடன் மட்டுமே பகிர முடியும், மற்றவர்கள் தங்கள் பக்கத்தில் அதைப் பார்க்க மாட்டார்கள்.

இந்தப் புதிய ஃபேவரைட்ஸ் அம்சம் வித்தியாசமாக வேலை செய்கிறது. அதாவது, உங்கள் ஃபீடின் மேல் என்ன புதிய போஸ்டுகள் தோன்றும் என்பதில் அதிக கட்டுப்பாட்டை வைத்திருக்க அனுமதிக்கிறது.

மேலும், இன்ஸ்டாகிராம் தற்போது ஒரு நிலையான வழிமுறையைக் கொண்டுள்ளது. இது உங்கள் ஃபீடின் மேல் எந்த போஸ்டுகளை காட்ட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது. இந்த வழிமுறையின் செயல்பாட்டை இன்ஸ்டாகிராம் அதன் ஜூன் 2021 வலைப்பதிவு இடுகையில் விவரித்தது.

Advertisment
Advertisements

இந்த புதிய ஃபேவரைட்ஸ் அம்சத்தை டெவலப்பர் அலெஸாண்ட்ரோ பலுஸி ட்விட்டர் பக்கத்தில் காட்சிப்படுத்தினார். அதை கீழே பாருங்கள்.

,
,

தற்போது சோதனை செய்யப்படும் இந்த அம்சம், புதிய இன்ஸ்டாகிராம் ஃபேவரைட்ஸ் அம்சம் உலகளாவியதாக இருக்குமா அல்லது அது இன்னும் சில மாற்றங்களைக் கொண்டுவருமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

இப்போது வரை, சில பயனர்கள் மட்டுமே ஃபேவரைட்ஸ் அம்சத்தைப் பயன்படுத்த முடியும். தகுதியானவர்கள் தங்கள் சுயவிவரப் பக்கத்தில் உள்ள மெனுவில் நெருங்கிய நண்பர்கள் பிரிவின் கீழ்க் காணப்படும் ஃபேவரைட்ஸ் பிரிவைத் தேடுவதன் மூலம் விருப்பங்களைக் காணலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Instagram

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: